By: WebDesk
Updated: September 27, 2019, 12:30:13 AM
Rasi Palan 27th September 2019: இன்றைய ராசிபலன்
Today Rasi Palan, 27th September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 27th September 2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 27, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
சில பிணைப்புகளை எப்போதும் உடைக்க முடியாது. நேர்மையாகவும், நிதானமாகவும் செயல்படும் எந்த பணியும் வெற்றிக்கு உகந்தவையே. இது தெரியாமல் பலரும் எப்படி ஜெயிப்பது என்று யோசிக்கிறார்கள். சுமாரான நாளாக இருந்தாலும், இது உங்களுக்கான நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
கடுமையாக போராடியும் சில தோல்விகளை உங்களால் தவிர்க்க முடியாது. இதற்காக யாரையும் குறை கூறி பிரயோஜனமில்லை. எவ்வளவு பேர் உங்களுடன் ஓடினாலும் அசரமாட்டீர்கள். ஆனால், கிரகங்களின் விளைவால் சில சறுக்கல்கள் சந்திப்பீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
ஏன், எதற்கு, எப்படி? என்று சில கேள்விகளை முன் வைத்து நகர்ந்து செல்லுங்கள். அது உங்களை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். காரணமின்றி சில கேள்விகளை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நேர்மறையான அணுகுமுறை உங்களுக்கான வெற்றிக் கதைகளை எழுதத் தயாராகும். கதைக்கான திரைக்கதை தயாரா என்பதை முதலில் முடிவு செய்து கொண்டு களத்தில் இறங்குங்கள். மாற்றத்தை ஏமாற்றமின்றி கடத்திச் செல்வீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
எப்பவுமே தீவிரமாக யோசிப்பதால், நிறைய திட்டங்களை கையில் வைத்திருப்பீர்கள். ஆனால், முதலில் எதை அமல்படுத்துவது என்பதில் பெரும் குழப்பம் உங்களிடையே நிலவும். எதுவாக இருந்தாலும், உங்களுக்கென்று தனி நேரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
கிரக நிலை அமைப்புகளால் உங்களுக்கு ஓய்வு நேர சுத்தமாக இருக்காது. அழுத்தமான மனநிலையை உணருவீர்கள். இருப்பினும், உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வது அவசியம். உங்களது தேவைகளை நீங்கள்தான் நீட்டித்துக் கொள்ள வேண்டும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
காலம் கனிந்து ஏற்படும் மனமாற்றம் உங்களுக்கு நன்மையும் பயக்கும், தீமையும் பயக்கும். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். எந்த வேலையையும் தள்ளிப்போடாமல் செய்தால் உங்களது வெற்றி ஓரளவிற்காவது உறுதி செய்யப்படும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
அடுத்து சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கும் காலம் இது. உங்கள் குடும்பத்தை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். மகிழ்வார்கள். உங்களது சில நடவடிக்கைகளால் ஏமாற்றங்கள் இருந்தாலும், இறுதியில் வெற்றி கிட்டும் என நம்பலாம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
நீங்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய மனிதர்களை கடந்து வந்தாலும், உங்கள் வேலை என்ன என்பதை புரிந்து வைத்துக் கொண்டு செயல்படுங்கள். உங்கள் விதி உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தும், அதனை நீங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உங்கள் எதிர்கால கனவுகளை நனவாக்க நீங்கள்மிகக் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். தொழில், தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் முன்னேற அதீத உழைப்பு தேவை. சவாலான நாள் இது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
வெளியிடங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் நிறைவான மனநிலை நிகழும். பணியிடத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். மனைவியின் அன்பு அதிகரிக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
சற்று மோசமான நாள் இது. உங்கள் நண்பர்களையே சரியாக கணிக்க முடியாமல் ஏமாந்து போவீர்கள். சறுக்கல்களை சந்திப்பீர்கள். ஆகையால், அவர்களை சற்று தூரத்தில் வைத்திருப்பது நல்லது.