Advertisment

Rasi Palan 01st October 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 01st October Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 01st October 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 01st October 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 01st October 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 01st October 2019: இன்றைய ராசி பலன், அக்டோபர் 01, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

நிதி விவகாரங்களில் அதிக கவனம் அவசியம். சிறு அசவுகரியமும் அதிக இழப்பை தந்துவிடும் வாய்ப்பு கொண்ட நாள். அதிகம் உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு உற்ற துணை நீங்கள் தான் என்பதே எக்காலத்திற்கு மறக்கவேண்டாம்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உற்ற தருணங்களில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். கிரகங்களின் சாதகமான பார்வையினால் நற்பலன்களை பெறுவீர்கள். செயல்களில் நேர்த்தி கிடைக்க அதிக கவனம் அவசியம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மற்றவர்களுடனான விவாதத்தை தவிர்த்தால் மனசஞ்சலங்களை குறைக்கலாம். விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வதால் மனமகிழ்ச்சி ஏற்படும். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்களின் அன்றாட நடவடிக்கைகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்வீர்கள். மற்றவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் உதவும் என்பதால், அதனை உதாசீனப்படுத்த வேண்டாம். நடுநிலையோடு செயல்படுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மற்றவர்களின் செயல்பாடுகளால், உங்களின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் மேற்கொள்ள நேரிடும். யார் என்ன மற்றும் எத்தகைய ஆலோசனைகளை சொன்னாலும் முடிவு தங்களுடையதாக இருப்பது நல்லது.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

நல்ல செய்தியால் மன அமைதி அடைவீர்கள். மனம் உற்சாகமாக உணர்வீர்கள். வாழ்க்கையில் முக்கிய திருப்பங்கள் ஏற்படும். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிட்ட விஷயங்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

எதிர்மறை விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். மற்றவர்கள் செய்ய தயங்கும் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்களுடைய செயல்களில் உள்ள நேர்த்தியால், மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களால் பாராட்டப்படுவீர்கள். மகிழ்ச்சியான தருணங்களில் வார்த்தைகளில் நிதானம் அவசியம். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

வாழ்க்கையே போர்க்களமாக உணர்வீர்கள். ஏதோ தியாக மனப்பான்மையுடனேயே இருப்பதுபோன்ற மனநிலையால், மனஉளைச்சலுக்கு ஆளாவீர்கள். இந்த நிலையிலிருந்து விடுபட, தியானம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளவும். பண விவகாரங்களில் அதிக கவனம் வேண்டும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

கிரகங்களின் சாதகமான பார்வையினால், செய்யும் செயல்களில் நேர்த்தி இருக்கும். நீங்கள் யார் என்பதை உணர்வீர்கள். புதிய விசயங்களை சுணக்கமின்றி துவங்குவீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

சொந்த காலிலேயே நாம் நிலைத்து நிற்கமுடியும் என்பதை உணர்வீர்கள், மற்றவர்களுக்காக ஜாமின் எதையும் வழங்காதீர்கள். இக்கட்டில் கொண்டுபோய் முடியும் என்பதால் எச்சரிக்கை அவசியம். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

வார்த்தைகளில் மென்மையான போக்கு கடைபிடியுங்கள். சுயநலமாக இருக்காதீர்கள்.எதையோ இழந்ததுபோன்ற உணர்வால் நாள்முழுவதும் தத்தளிப்பீர்கள். ரகசியங்களை கட்டிக்காப்பது நல்லது.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment