Rasi Palan 04 December 2018 : இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி இருக்கிறது?

Daily Rasi Palan Tamil, December 1 , 2018 : உங்களின் ராசிக்கு இன்றைய பலன் என்ன என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்

By: Updated: December 4, 2018, 05:36:25 PM

Rasi Palan 04 December 2018 : இந்த தினத்தில் நன்மைகள் பெற உங்களின் ராசிக்கு இன்றைய பலன் என்ன என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

கேட்பதை வைத்து எதையும் நம்ப முடியாது. பார்ப்பதை வைத்தும் எதையும் நம்ப முடியாது. பேசுவதை வைத்தும் நம்ப முடியாது. அந்த இறைவன் ஒருவனே அனைத்திற்கும் காரணம். அவனே நம்பிக்கை. அவனே எல்லை.

Rasi Palan 04 December 2018 :  இன்றைய ராசி பலன் (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

நிதி பற்றாக்குறை அல்லது பணம் ரீதியான பிரச்சனைகள் தோன்றும். இருப்புனும் அந்த கஷ்டங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து நம்பிக்கையுடன் செயல்பட்டால் இந்த நாள் இனிய நாளாக அமைய வாய்ப்புள்ளது. உங்களுக்குள் இருக்கும் உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடைய எல்லா சூழ்நிலைகளையும் புரிந்து நடந்துக் கொள்வார்கள். முழு ஆரோக்கியத்துடன் உற்சாகமாக இருக்கும் நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்களின் சீரிய அணுகுமுறை மூலம் கடினமான பணிகளைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். இருப்பினும் இந்த உற்சாகத்தினாலேயே சில முடிவுகள் எடுப்பதில் குழப்பம் ஏற்படும். எனவே சற்று பொருமையுடன் விஷயங்களை கையாள்வது அவசியம். இந்த நாளில் உங்கள் வாழ்க்கைத் துணையோடு ஒரு சில சஞ்சலங்கள் வந்து விலகும். உத்தியோகத்திலும், சுற்று வட்டாரத்திலும் நல்ல நண்பர்கள் பழக்கும் கிடைக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

எந்த பிரச்சனைகள் இருந்தாலும் அதை உட்கார்ந்து பேசினால் எல்லாம் சரியாகும். இதனால் உங்கள் மனதை வாட்டி வதைக்காமல் இருந்தாலே நிம்மதி உங்களை தேடி வரும். ஒரு சில அறிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக் கொண்டால் வாழ்க்கையின் வெற்றிப் பாதையில் செல்ல உதவும். உங்கள் துணையுடன் தவறான புரிந்துணர்வு ஏற்படும். இந்த வேறுபாட்டை நீக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். எனவே அணுசரித்து செல்வது அவசியம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பணம் தேவை திடீரென அதிகரிக்கும். இது நல்லதும் கிடையாது கெட்டதும் கிடையாது. ஒரு அத்தியாவசிய தேவைக்கான செலவாக இது அமைய அதிக வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சகபணியாளர்களுடனான உறவுமுறையில் சில குழப்பங்கள் காணப்படும். இன்று சிறிய விஷயங்களைப் பெரிதாகக் கொள்வீர்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் உங்கள் துணையுடன் சில சிக்கல்களை சந்திக்க நேரும். மனம் திறந்து பேசி வேறுபாட்டை களைவதன் மூலம் உறவில் நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்படும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உழைத்து உடைத்து ஓடாக தேயும் நாள். நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் உங்கள் உயர் அதிகாரிக்கு அதெல்லாம் போதாது. ஆனால் இந்த உழைப்பு நாள் இறுதியில் உங்களுக்கு நன்மையையே விட்டுச் செல்லும். புதிய வேலை வாய்ப்புகளை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி காதுக்கு வந்து சேரும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

இன்று உங்களிடம் வருத்தமான மன நிலை காணப்படும். உங்கள் முயற்சிகள் மூலம் வெற்றிகரமான பலன்கள் கிடைக்காது. இதனை சுமையாகக் கருதுவீர்கள். ஆனாலும், பிறருக்கு பலன்களை அளிக்காத நட்சத்திரங்கள் கூட இன்று உங்களுக்கு அருள் புரியும். எனவே முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்லுறவு பராமரிக்க நீங்கள் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்காது. தேவையற்ற கவலைகள் காரணமாக இன்று உங்கள் திறன் குறையும். ஆனால் சோர்ந்துவிடாமல் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். வெற்றி பெற வாய்ப்புள்ளது. பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. இது உங்களுக்கு கவலையை அளிக்கும். உங்கள் துணையுடன் சூடான விவாதம் ஏற்படலாம். அதிக பணம் செலவு இருக்கும் நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

இன்று நீங்கள் உணர்சிப்பூர்வமாகப் பேசுவீர்கள். இதனை தவிர்ப்பதன் மூலம் பாதகமான சூழ்நிலை ஏற்படாமல் இருக்கும். அதிக பொறுப்புகள் காரணமாக பணப்பற்றாக்குறை காணப்படும். எனவே செலவுகளை சமாளிப்பதை கடினமாக இருக்கும். பணியிடத்தில் அதிகப் பணிச் சுமைக் காணப்படும். அதனால் உங்கள் பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. தியானம் மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலன் காணலாம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்கள் பணிகளை எளிதில் முடிப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். குறித்த நேரத்திற்கு முன்பே உங்கள் பணிகளை முடித்து விடுவீர்கள். இதனாலேயே இந்த நாள் மிகவும் போரிங்காக இருப்பது போல உணருவீற்கள். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊக்கத் தொகை கிடைக்கும் நாள். உங்கள் துணையுடன் நல்ல உறவு மேம்படும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்களிடம் ஆற்றலும் உறுதியும் நிறைந்து இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் உங்கள் பணிகளை திறமையாக முடிப்பீர்கள். உங்களை சிலர் கவருவார்கள். மனதில் ஆசைகள் வந்து போகும் நாள். அந்த நபரிடம் சென்று உங்கள் விருப்பத்தை தெரிவிக்க முயற்சி செய்து வேண்டாம் என்று நீங்களே விலகுவீர்கள். உங்களிடம் காணப்படும் உற்சாகம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

சில ஏமாற்றங்கள் காணப்படும். சவாலான சூழ்நிலைகளை எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி தைரியமாகக் கையாள வேண்டும். சக பணியாளர்களிடம் மனக் கசப்புகள் வரும். அதிகப்படியான பணிகள் கவலையை அளிக்கும். இன்று கூடுதல் செலவுகள் காணப்படும். பண இழப்பு ஏற்படாமல் இருக்க திட்டமிட்டு செலவழிப்பது அவசியம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமாக இருக்காது. நீங்கள் உணர்ச்சிவசப்ப்டுவீர்கள். இன்று வெற்றி பெறுவதற்கு அமைதியான கட்டுப்படாடான அணுகுமுறை தேவை. உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகள் வெளிப்படும் நாள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பணம் விஷயங்களை கவனமாக கையாளுங்கள்.

Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Tamil Rashifal by following us on Twitter and Facebook

Web Title:Rasi palan 04 december

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X