Advertisment

Rasi Palan 04th October 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 04th October Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 04th October 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 04th October 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 04th October 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 04th October 2019: இன்றைய ராசி பலன், அக்டோபர் 04, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

மனஅமைதி, தியானம் உள்ளிட்டவைகளுக்காக சிறிது நேரத்தை ஒதுக்குவீர்கள். உங்களை மனஅழுத்தத்தில் இருந்து விடுபட இதுவே ஒரே வழி. விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிப்பீர்கள். செய்யும் விஷயங்களில் வெற்றி கிட்டும். குடும்ப உறுப்பினர்கள் தக்கசமயத்தில் ஆலோசனைகளை வழங்குவார்கள். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மனமகிழ்ச்சி தரும் தகவல்களால் உற்சாகமடைவீர்கள். மன சஞ்சலங்களிலிருந்து விடுபடுவீர்கள்.மற்றவர்களிடம் மனம்விட்டு பேசுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்பீர்கள். நகைச்சுவை தன்மையால் மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். லாபகரமான நாள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

முக்கிய விஷயங்களில் இறுதிநேரத்தில் மாற்றம் செய்வீர்கள். நிதி விவகாரங்களில் அதிக அக்கறை அவசியம். தரமறிந்து உணவுகளை உண்ணவேண்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உறவினர்களால் தொந்தரவு ஏற்படும் என்பதால் அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது. செய்யும் காரியங்களில் கவனமுடன் இருப்பது இழப்பை தடுக்க உதவும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

வாழ்வின் யதார்த்தத்தை உணர்வீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். விருந்து மற்றும் விசேஷங்களில் கலந்துகொள்வதால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். மன அமைதி தேவைப்படும் நாள். உடல்நலனில் கவனம் கொள்வது நல்லது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

போதும் என்ற மனம் பொன் செய்யும் மருந்து என்பதை மறக்க வேண்டாம்.. அதை நீங்கள் பின்பற்றுவது நல்லது. உணவில் கட்டுப்பாடு தேவை. மதம் சார்ந்த நம்பிக்கையில் நாட்டம் அதிகமாகும். மற்றவர்களை ஏளனமாக பா ர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். கணவன்-மனைவி உறவில் உரசல் உண்டாக வாய்ப்புள்ளது. காதலில் பிரிவுகள் உண்டாகலாம். பணியிடத்தில் நீங்கள் விரும்பாவிட்டாலும் வெற்றி வந்தே தீரும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

வெற்றிகரமான நாள் இது. பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். காதல், திருமணம் தித்திப்பாக இருக்கும். பல நாட்கள் இழுத்துக் கொண்டிருக்கும் வழக்குகள் முடிவு பெறும். நல்ல வேலை வாய்ப்புகள் கிட்டும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். உங்களின் இன்றைய சேமிப்பு நாளை நிச்சயம் கைக்கொடுக்கும். நிதானமாக யோசித்து எந்தவொரு செயலிலும் முடிவெடுங்கள். பெற்றவர்களின் மனம் குளிர நடந்து கொண்டாலே உங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிடும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment