Today Rasi Palan, 05th October 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 05th October 2019: இன்றைய ராசி பலன், அக்டோபர் 05, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
அதிர்ஷ்டகரமான நிகழ்வுகளால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். மற்றவர்களையும் சரிசமமாக நடத்துவீர்கள். அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பீர்கள். மனம் சொன்னதை செய்து மகிழ்வீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். மற்றவர்களின் ஆலோசனைகள் தக்கநேரத்தில் உதவும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதனால் கவனமாக இருத்தல் அவசியம். பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். இடமறிந்து பேசுவதால் தேவையற்ற சர்ச்சைகளில் இருந்து தப்பிக்கலாம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
மற்றவர்களுக்கு ஆலோசனைகளை தருவீர்கள். மற்றவர்கள் உங்களால் பலனடைவார்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
நேர்மையாக நடந்துகொள்வதால் மறைமுக எதிர்ப்புகளில் இருந்து விடுபடுவீர்கள். பிறரிடமிருந்து உதவிகள் தக்கநேரத்தில் வரும். தியானம் மேற்கொள்வதால் மனஅமைதி கிடைக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
கடினமான நாள். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. தேவையில்லாத விசயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
நண்பகலுக்கு பிறகு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். பொது விசயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். மற்றவர்களை தங்களது சுயநலத்திற்காக தங்களை பயன்படுத்திக்கொள்வார்கள். உங்களை மாற்றிக்கொள்ள இதுவே சரியான தருணம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
திருமண முயற்சிகள் ஈடேறும். புதிய உறவுகள் கிடைப்பதால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
முற்காலத்தில் செய்த உதவி, இப்போது தகுந்த பலனளிக்கும். மற்றவர்கள் தங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். மகிழ்ச்சியான நாள்..
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
நிதி விவகாரங்களில் அதிக கவனம் அவசியம். நீண்ட தொலைவு பயணங்களுக்கு திட்டமிடுவீர்கள். உற்ற துணைவரின் ஆதரவு கிடைப்பதினால், மனம் மகிழ்வீர்கள். வாகனப்போக்குவரத்தில் கவனம் அவசியம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
அதிக நேரம் உழைப்பீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். கணவன் - மனைவி இடையே மனக்கசப்பு வந்து நீங்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
நிதி விவகாரங்களில் விழிப்புணர்வுடன் இருந்து மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருப்பீர்கள். பொது விவகாரங்களில் அக்கறை செலுத்துவீர்கள். மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.