Rasi Palan 06 December 2018 : இந்த தினத்தில் நன்மைகள் பெற உங்களின் ராசிக்கு இன்றைய பலன் என்ன என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.
இறைவனுக்கு செய்யும் பூஜைகள் எவ்வளவு புன்னியம் அளிக்குமோ அதை விட அதிகமான புன்னியங்களை நமக்கு அளிப்பது மனித சேவை. நம்முடன் இருப்பவர்களை நாம் கவனித்துக் கொண்டால், நம்மை ஆண்டவர் கவனித்துக் கொள்வார் என்பதே சரி.
Rasi Palan 06 December 2018 : இன்றைய ராசி பலன் (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நிம்மதி கிட்டும் நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உத்யோகத்தில் பொறுப் புகள் அதிகரிக்கும். மாலை 5 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபா ரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்டு செயல் படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வேற்றுமதத்தவர் அறிமுக மாவார். பயணங்களால் மகிழ்ச்சிதங்கும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப் புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். சாதிக்கும் நாள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.