மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
கடந்த 24 மணி நேரத்தில் உங்களுக்கு சில யோசனைகளை தோன்றியிருக்கும். அதனை அப்படியே அமல்படுத்த முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம். ஆனால், நம்பிக்கையற்ற உங்கள் மனப்பான்மை உங்களை தோல்விப் பாதைக்கு அழைத்துச் செல்லும். எனவே, முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
மாடர்ன் மருத்துவ உலகில், நீங்கள் ஜோதிடங்களை ஏளனமாக தான் பார்ப்பீர்கள். அதை மாற்ற முடியாது. ஆனால், நம்புங்கள் உங்கள் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை. முடிந்தால் பகல் கனவு காண்பதற்காக கூட ஓய்வு எடுங்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
கடந்த சில நாட்களாக உங்களுக்கு நிலவிய பொருளாதார மந்தநிலை மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. கிரக நிலைகள் உங்கள் சாதகமாக செயல்பட ஓரளவுக்கு விரும்புகின்றன. பணியிடத்திலும் நல்ல முன்னேற்றங்களை காண்பீர்கள். மனதளவில் அது உங்களை உற்சாகப்படுத்தும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். உங்களின் செயலிலும் வேகம் தெரியும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். கிரகங்கள் உங்களுக்கு சாதமாக அமைகின்றன. சில இடங்களில் மட்டும் தடுமாறுவீர்கள். திருப்தியான நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
ஏற்றம்… இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை இன்று அனுபவிப்பீர்கள். உங்களின் பாதை என்னை என்பது புலப்பட ஆரம்பிக்கும். பணியிடத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்குவீர்கள். உங்களுக்குள் இவ்வளவு திறமையா என்று பணியிடத்தில் உள்ள மற்றவர்களை ஆச்சர்யப்பட வைப்பீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பெரும்பாலான சவால்களை கடந்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருப்பீர்கள். துணிச்சல் உங்களின் பலம் என்றால், எல்லோரின் கருத்தை கேட்பது உங்கள் பலவீனம். நாசூக்காக சில சங்கடங்களை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. நிம்மதியான நாள் இன்று.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
கடவுள் வழிபாட்டுடன் இன்றைய நாளை நீங்கள் துவங்க வேண்டியது அவசியம். உங்களைச் சுற்றி நிலவும் குழப்பமும், பதட்டமும் நெகட்டிவிட்டி பரப்பும். உங்கள் தோல்விக்கு அவையே காரணம். மனம் விட்டு வழிபடுங்கள். வெற்றி நிச்சயம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அந்த நட்பால் சில பலன்களும் தேடி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வெற்றிகரமாக உங்களுக்கு கொடுத்த பணியை முடிப்பீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
முடியாத செயல்களை விட்டுவிடுங்கள். அதற்காக தேவையில்லாமல் நேரத்தையும், ஆற்றலையும் வீணடிக்க வேண்டாம். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கவில்லை என்றாலும், உங்களுக்கான மதிப்பு குறையாது. ஆக்ரோஷமான உங்கள் மனநிலைக்கு நிச்சயம் அமைதி தேவை.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
தொடர் வெற்றிகள் உங்களை மகிழ்விக்கும். அதனால், உண்டாகும் போதைக்கு மயங்க வேண்டாம். ஸ்மார்ட் ஒர்க் தான் உங்களின் அடையாளம். இன்றும் அது தொடரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
தகுதியான இடத்தில் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. சில நேர்மையான எண்ணங்கள் உங்களை மேலோங்க வைக்கும். உங்களது கடந்த கால தவறுகள் மறைந்தும், மறந்தும் போகும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
வார்த்தைகளை உபயோகிக்கும் போது, மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியூர்களுக்கு செல்லும் வாய்ப்பு திடீரென உருவாகும். நட்டமடைந்த தொழிலைப் பற்றி மீண்டும் யோசிக்க வேண்டாம். ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வாருங்கள், குழப்பங்களில் இருந்து தெளிவு பிறக்கும்.