Today Rasi Palan, 10th April 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 10th April 2020: இன்றைய ராசி பலன், ஏப்ரல் 10, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
உங்களுக்கென்று உள்ள ரகசியங்களை உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களிடம் சொன்னால் அதற்கு பேர் ரகசியம் அல்ல. உங்களால் செய்து முடிக்க முடியும் என்ற வேலைக்கு மட்டும் ரிஸ்க் எடுத்தால் போதும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
உங்கள் நட்சத்திர கூட்டமைப்பில் இன்று சில மாற்றங்கள் ஏற்படும். உங்களில் அனுப்பப்பட்ட சில பிரச்சனைகள் உங்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்களுக்கு பின்னால் என்ன பேசுகிறார்கள் என்பதையும் கவனிப்பது உடலுக்கு நல்லது. யாரையும் காயப்படுத்துவதால் எந்த நன்மையையும் நடந்துவிட போவதில்லை. உங்கள் முடிந்தவற்றை சிறப்பாக செய்யுங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
நீங்கள் உங்கள் விருப்பம் போல் வாழலாம். ஆனால், உங்களை விரும்புபவர்கள் உங்களில் விரும்புவது போன்றும் நீங்கள் வாழலாம். அது அவர்களை மகிழ்விக்கும். உங்கள் ஏற்றமான நிமிடங்கள் வழக்கம் போல் உங்களை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
எப்பேற்பட்ட கடினமான சூழலாக இருந்தாலும் அதை லாவகமாக கையாள்வதில் தனித்திறமை கொண்டிருப்பீர்கள். உங்களை பாதைகளை நீங்களே அமைத்துக் கொள்வதால் அதனால் வரும் நன்மையும், துன்பமும் உங்களையே சாரும் என்பதை மறக்க வேண்டாம்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
வெளியூர் பயணம் செய்யும் வாய்ப்புகள் ஏற்படும். அது கடல் தாண்டிய பயணமாகவும் இருக்கலாம். நினைத்தது நிறைவேறவில்லையே என்ற கவலை வேண்டாம். எல்லாம் நன்மைக்கே. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள், பிரச்சனைகள் விலகி ஓடும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
அடுத்த மூன்று நாட்களுக்கு மிகத் தீவிரமான பண சிக்கல் ஏற்படும். வீண் சுமைகளை தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டாம். தேவையில்லாமல் வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம். எல்லாம் ஒரு காலம் வரை மட்டுமே.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
இன்னல்களை கண்டு அஞ்ச தேவையில்லை. செயல்களில் ஆதிக்கம் காட்டுங்கள். வெற்றி தேடி வரும். இறுக்கமான மனநிலையை களைய உண்மையுடன் இருங்கள். கனவுலகத்தில் மிதக்க வேண்டாம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
நேர்மறையான எண்ணங்கள் ஏற்படும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை மும்மரமாகச் செய்வீர்கள். பணிச்சுமை அதிகமாகக் காணப்படும். நீங்கள் சாமார்த்தியமாக அவற்றை கையாள வேண்டும்
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
இன்று பணிகள் இறுக்கமாக காணப்படுவதால் சிறப்புடன் பணியாற்ற உகந்த நாள் அல்ல. சமயோஜித புத்தியுடன் பணியாற்றினால் வெற்றி கிடைக்கும். உங்களிடம் காணப்படும் மன அழுத்தத்தை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உங்கள் கருத்துக்களை உங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்வதற்கு சிறப்பான நாள். உங்கள் துணையுடன் பயனுள்ள திட்டங்கள் பற்றி விவாதிப்பீர்கள். சில தடைகளைக் கடந்த பின் உங்களுக்கு பணம் கிடைக்கும். வெளி நாட்டிலிருந்து நீங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பணம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
தேவையற்ற கவலைகள் காரணமாக சில சௌகரியங்களை இழப்பீர்கள். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். பணிச்சுமை ஏற்படும். உங்கள் பணிகளை நன்றாக திட்டமிட்டு நேராநேரத்தில் அவற்றை முடிக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil