Rasi Palan Today 10th December 2018 in Tamil : இந்த உடலில் உருவான எந்த உயிரும் ஒருநாள் உதிர்ந்தே தீரும். அதைத் தடுக்க யாராலும் முடியாது. எந்த சக்தியாலும் முடியாது. ஆனால், அந்த உயிரின் கர்மா அதனை துரத்திக் கொண்டே இருக்கும். எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும், அது தொடரும்.
Rasi Palan 10th December 2018 : இன்றைய ராசி பலன், 10 டிசம்பர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
புத்தி வந்து நீங்கள் திருந்துவதற்குள் காலம் கடந்திருக்கும். மேதாவித்தனமான குணம் தான் உங்கள் எதிரி. அதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சுமாரான நாளாக இருந்தாலும், மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
நாளை செய்யலாம் என்று அப்படியே உட்கார்ந்து இருக்காதீர்கள். பொன்னான நேரத்தை தவறவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கிரக நிலைகள் உங்கள் ராசிக்கு எதிராக இருப்பதால், மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
டென்ஷனான தருணங்கள் உங்களை நிலைகுலைய வைக்கும். கடினமான இந்த நிமிடங்களை நீங்கள் கடந்து வந்தாலே அதுவே பெரிய காரியம். அதற்காக அச்சப்பட வேண்டாம். மாணவர்களின் கல்வித் திறன் ஆச்சர்யப்படும் அளவிற்கு உயரும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
இரும்பு தொடர்பான பிஸ்னஸ் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதில், ஏற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். குடும்பத்தில் நெருக்கம் காட்டுவீர்கள். நிம்மதியான நாள் இன்று.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுவீர்கள். கனக்கச்சிதமாக முடிவுகளை எடுப்பீர்கள். அது உங்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், அதற்கான முயற்சி உங்களிடம் குறைவாகவே உள்ளது. வீண் பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து உங்கள் வேலையை கெடுத்துக் கொள்ள வேண்டாம். நிறைவான நாள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
உங்கள் பழைய தவறுகளை மறக்க முடியாமல் திணறுவீர்கள். தயவுசெய்து, அதனை கடந்து புதிய வாழ்க்கைக்குள் அடியெடுத்து வையுங்கள். வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்புகள் கிட்டும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும், அதற்கேற்ற மதிப்பு இல்லையே என்று வருத்தப்படுவீர்கள். ஆனால், இந்த வேதனை சில காலங்களுக்கு தான். விரைவில் இந்நிலை மாறும். உங்களை நோகடித்தவர்களே, உங்களைத் தேடி வருவார்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
காதல் ஆஃபர்களை இன்று எதிர்பார்க்கலாம். எலக்ட்ரானிக் பொருட்கள் ஏதாவது ஒன்றை இன்று வாங்குவீர்கள். வாய்ப்புகள் சில உங்களை கைநழுவிப் போகலாம். எல்லாவற்றிற்கும் தயாராக இருங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
தித்திப்பான நாள் இது. எதிர்பார்த்ததை விட, பண வரவு அதிகமாக இருக்கும். பல நாட்களாக இருந்த உடல் உபாதை உங்களை விட்டு விலகும். தத்துவ மழை பொழிவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உங்கள் மேல் குறைகளை வைத்துக் கொண்டு மற்றவர் மீது பழி போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். அதற்காக மெனக்கெடுவீர்கள். நிறைவான நாள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. கடல் கடந்து செல்லும் அமைப்பு இந்த காலக்கட்டத்தில் உள்ளது. பணியிடத்தில் சில சங்கடங்கள் இருந்தாலும், அதனை சரி செய்யும் பக்குவம் உங்களுக்கு அதிகரிக்கும்.