Rasi Palan 10th June: இன்றைய ராசிபலன், கடினமான தருணங்களையும் கேஷுவலாக கடந்து வருவீர்கள்!

Rasi Palan Today, 10th June Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 10th June 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 10th June 2019 : இன்றைய ராசி பலன், ஜூன் 10, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

மிகவும் எமோஷனலான நாளாக இன்று அமையும். நீங்கள் அவசரமில்லாமல் எடுத்த முடிவுகள் வெற்றியை வசமாக்கும். ஆகையால் தான் அந்த எமோஷன். இவ்வளவு நாள் எங்கே எங்கே என்று தேடிக் கொண்டிருந்த வெற்றிகள் இனி உங்கள் பக்கம் வரிசைக் கட்டும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

அத்தியாவச தேவைகளுக்கு உங்கள் சிக்கல் இருக்காது. அவ்வளவு தான். இதுவரை பார்க்காத சில சங்கடங்களை இன்று பார்ப்பீர்கள். நிதி நிலைமை கஷ்டம் தான். அதற்காக கடன் வாங்கும் நிலைக்கு செல்லாது. பாகுபாடின்றி உங்களுக்கான வேலைகளை நீங்களே செய்ய பழகுங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சிறப்பான பல நிகழ்வுகளை நீங்கள் இன்று ரசிக்க வாய்ப்புகள் உள்ளது. எப்போதே யோசித்து வைத்திருந்த திட்டங்கள் இப்போது கைக்கொடுக்கும். அதில், வெற்றிக்கான சூட்சமம் இருக்கும். அந்த வெற்றி உங்களுக்கு வசப்படும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்களின் விருப்பங்கள் வட்டியும் முதலுமாக நிறைவேற காத்திருக்கின்றன. சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்துவீர்கள். உங்களுக்கு பிடித்தத் துறையில் வெறித்தனமான உழைப்பை கொட்டுவீர்கள். பணியிடத்தில் உங்கள் மதிப்பு கூடும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

தரமான தாக்குதலை நடத்த தயாராகிவிட்டீர்கள். உங்கள் எதிரிகள் மீது அன்பு, பாசம் செலுத்தி… உங்களை இனி எதிர்ப்பவர்களும், இந்த குணாதிசயங்களால் உங்களிடம் வீழ்வார்கள். கடினமான தருணங்களையும் கேஷுவலாக கடந்து வருவீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உடல் நலத்தில் அக்கறை கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது? அதை விட வேறு எதுவும் முக்கியமல்ல. பணம் உட்பட. சிந்தித்து செயல்பட கற்றுக் கொள்ளுங்கள். அதுவே உங்களை மேன்மடைய வைக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கொஞ்ச நாளைக்கு உங்க உறவினர்களை வீட்டிற்குள்ளேயே விடாதீர்கள். உங்களைச் சுற்றிய பல பிரச்சனைகளுக்கு அவர்களும் ஒரு காரணமே. மறக்க வேண்டாம். உங்கள் எதிரிகளை கூட நீங்கள் நம்பலாம். நண்பர்களின் ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

யாருக்காகவும் யாரையும் நீங்கள் பகைத்துக் கொள்ள வேண்டாம். அதனால் உங்களுக்கு ஒரு பயனும் இருக்கப் போவதில்லை. சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முயற்சிக்காதீர்கள். உங்களை தான் பைத்தியக்காரன் என்பார்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

சோம்பேறித்தனம் உங்களது எதிரி. அலுப்பு உங்கள் விரோதி. இவை இரண்டையும் ஒழித்துக் கட்டினால், உங்கள் உயர்வுக்கு அன்றே பிள்ளையார் சுழி போடப்படும். யார் வேண்டுமானாலும் உங்களை அதிகாரம் செய்ய விட, உங்கள் வாழ்க்கை ஒன்றும் விளையாட்டு அல்ல. சுதாரிக்க வேண்டியது அவசியம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வயிறு தொடர்பான சில உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தில் சில சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதை நேர்த்தியாக தவிர்க்கும் பக்குவம் உங்களுக்கு வேண்டும். அதை நீங்கள் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்கள் டெய்லி சார்ட்டில், உங்கள் வெற்றிக்கான விவரங்களை இப்போதே எழுதி வைத்துவிடுங்கள். உறுதியான உங்கள் தன்னம்பிக்கை அந்த வெற்றிகளுக்கு காரணமாக அமையும். தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் செய்யும் சில சில தவறுகளும் உங்களுக்கு சாதகமான முடிவுகளை கொடுக்கும். ஏன்னா, உங்கள் கிரக நிலை அப்படி.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

நீண்ட நாட்களாக உள்ளுக்குள் வைத்திருந்த காதலை தெரிவிப்பீர்கள். அது கைக்கூடவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. தைரியமாக செல்லுங்கள். குடும்பத்தில் நிலவிய சங்கடங்கள் மறைந்து மகிழ்ச்சி காண்பீர்கள்.

Get all the Latest Tamil News and Horoscope in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Rasi Palan by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close