Today Rasi Palan, 10th June 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 10th June 2020: இன்றைய ராசி பலன், ஜூன் 10, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
பெரிய லட்சியத்தை அடைய சில தடங்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை மறந்துவிட வேண்டாம். அலுவலக நண்பர்கள் அனுசரணையாக இருப்பர். உங்களது அணுகுமுறையே நடத்தையே தீர்மானிக்கும் என்பதால் கவனம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
கிரகங்களின் சாதகமான பார்வையால், நிதிவிவகாரங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெற்றி இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள், மகிழ்ச்சியான நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
கடந்த கால நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
கணவன் மனைவி, காதலர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கற்பனை குதிரையை தட்டி விடுவீர்கள். நிழலை நிஜமாக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
ஷாப்பிங்கில் அதிக நாட்டம் கொள்வீர்கள். புதிய விசயங்களுக்காக தங்களை தயார்படுத்திக்கொள்வீர்கள். நற்பலனை பெற காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்வீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். முக்கிய விவகாரங்களில் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். நீண்டகால பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
புதுவித உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். மற்றவர்களும் பயன்படும் வகையில் உங்களது செயல்பாடுகள் இருக்கும். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
பொதுநல விசயங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். புது அனுபவங்கள் கிடைக்கும். வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
சாதகமான நாள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். சிறு விசயங்களும் அதிக மகிழ்ச்சியை தரும். புது விசயங்களில் அதிக ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
வர்த்தக நடவடிக்கைகளில் அதிக கவனம் அவசியம். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
தனித்துவமாக செயல்படுவீர்கள். முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு உணர்த்துவீர்கள். உணர்ச்சிவசப்பட வாய்ப்பு இருப்பதால், மன அமைதி கெடும். வார்த்தைகளில் கவனம் வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil