Rasi Palan 10th october 2020 : இன்றைய ராசிபலன்

உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

By: Updated: October 10, 2020, 07:19:37 AM

Today Rasi Palan, 10th october 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan  10th october 2020: இன்றைய ராசி பலன், 10th அக்டோபர், 2020 : 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : உங்கள் மனக்கவலைகள் களைந்து போகும்.  சுற்றத்தாரின் நட்பு கிட்டும்.  பொருளாதார ரீதியில் மேம்பாடு ஏற்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. பொறுப்புகள் அதிகமாகும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : மாலை நேரங்களில் சற்று தனிமையை உணர்வீர்கள். பெரிய கூட்டங்களில் உங்களை இணைத்துக் கொள்வதை விட, சிறிய நட்புக் கூடாரத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு, செய்வதினால் உங்கள் மன நிம்மதியை மீட்கலாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : உங்களை நீங்கள் குறைத்து மதிப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்களை  சிறந்த முறையில் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துங்கள். தயக்கம் வேண்டாம்.

கடகம் (ஜூன் 22  – ஜூலை  23 ) :  நீங்கள் உங்கள் துணையுடன் சிறப்பான உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் சொத்துக்கள் அதிகரிக்கும். உங்கள் நிதிநிலைமையை சிறப்பாக வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம் ( ஜூலை 24 – ஆகஸ்ட் 23 ): உங்கள் மனநிலையை  இழந்து  விடாதீர்கள். எதிர்மறையான  உணர்ச்சிகளுக்கு அடிபணிந்து விடாதீர்கள்.  மனக்கட்டுப்பாடு மிகவும் முக்கியம். மற்றவர்களிடம் உங்களை சிறந்த முறையில் வெளிபடுத்துவதில் தான் உங்களின் வெற்றி அமைந்திருக்கிறது.

கன்னி (ஆகஸ்ட் 24  – செப்டம்பர் 23  ) :  பிஸியாக,  சுறுசுறுப்பாக  உங்களை வைத்துக் கொள்ளுங்கள். சிறந்த சந்திப்புகள்  அனைத்தும் நல்ல உரையாடலை கொண்டிருக்கும். சில நேரங்களில், உரையாடல்கள்  தீவிரமாக இருக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23 ) : நீங்கள் உங்கள் துணையுடன் சிறப்பான உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பரஸ்பர புரிந்துணர்வு காரணமாக உறவில் நல்லிணக்கம் காணப்படும். குடும்ப உறவுகளின் ஆதரவுகள் கிடைக்கும்.

விருச்சகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22 ) :  நீங்கள் எதிர்பார்த்ததை விட மற்றவர்கள்  மிகவும் வலுவானவர்கள் என்பதை நீங்கள் இப்போது உணர வேண்டும். மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது  என்ற அடிப்படை வாதத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மாற்றத்தை புத்திசாலித்தனமாக வழிநடத்த முயற்சி செய்யுங்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 20 ):  உங்கள் சிந்தனைக்கு பணம் முக்கியமானது. உங்கள் கற்பனைகளை ஆதரிக்க கொஞ்சம் பணத்தை  செலவழிக்க முயற்சியுங்கள். உங்கள் கனவு நனவாகும் வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20 ): உற்ற நண்பர்களின் அனுபவம் உங்களுக்கு தக்க சமயத்தில் கைகொடுக்கும். உங்களின் பலவீனங்களை நீங்களே வெளிபடுத்திக் கொள்ள வேண்டாம். யாரும் எதிர்பாராத யோசனை உங்களிடம் உள்ளது. அந்த யோசனை இந்த உலகை ஈர்க்கும் சக்தியுடையது. நீங்கள் சுயமாக சிந்திக்க தொடங்க வேண்டும்.

கும்பம் ( ஜனவரி 21 – பிப்ரவரி 19 ):  நீங்கள் இதுவரை மிகச் சிறப்பாகச்  செயல்பட்டு வந்துள்ளீர்கள் . அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய சில முக்கிய முடிவுகளை நீங்கள் துணிந்து எடுக்க வேண்டும். ஆரோக்கியமான உடல் ஆரோக்கியமான மனதை உருவாக்கும் என்ற பழமொழியின் அர்த்தம் உங்களுக்குத் தெரியும்.

மீனம் ( பிப்ரவரி 20 – மார்ச் 20 ):  வரவிருக்கும் உற்சாகமான நேரங்களை எதிர்பார்த்து நிம்மதியடையுங்கள். நீங்கள் ஒரு தாராள மனநிலையில் இருக்கிறீர்கள். மற்றவர்களின் உணர்வுகள், நம்பிக்கைகள் மற்றும் ஆசைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள்.  

.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook

Web Title:Rasi palan 10th october 2020 rasi palan news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X