Today Rasi Palan, 10th September 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 10th September 2020: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 10, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
நிதி விவகாரங்களில் திருப்திநிலை ஏற்படும். சரியான நேரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இழந்தததை மறக்க நினைப்பீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உதவிக்கரம் நீட்டுவீர்கள். தடைகள் தற்காலிகமானதுதான் என்பதை உணர்வீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
எண்ணிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும். உங்களின் புதிய உத்தியினால், மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உறவுகளின் மகத்துவத்தை உணர்வீர்கள். புதுப்புது விசயங்களில் கவனம் செலுத்துவீர்கள். குழந்தைகள் மீது அதிக அக்கறை காட்டுவீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
வீட்டுத்தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் அபிப்பிராயங்களை பெறுவீர்கள். மன்னிப்பு கேட்க தயங்கமாட்டீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
மகிழ்ச்சியான நாள். கடன்களை அடைப்பீர்கள். மற்றவர்கள் தக்கநேரத்தில் உதவிக்கரம் நீட்டுவர். தக்க பிரதிபலன் கிடைக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். விளைவுகளை அறியாமல் புதிய விசயங்களில் ஈடுபட வேண்டாம். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
காரியத்தடைகள் அகலும். வீட்டுத்தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களை குற்றம் சுமத்துவதால் எவ்வித பயனுமில்லை என்பதை உணர்வீர்கள். மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
தொழில்விவகாரங்கள் நன்மை அடைய சிறிது காத்திருக்க வேண்டும். பங்காளிகள் உறுதுணையாக இருப்பர். எதிர்கால வாழ்விற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
அசதியால் அவதிப்படுவீர்கள். அடுத்த 5 நாட்களில் எண்ணிய காரியங்கள் சிறப்பாக நடந்தேறும். புதிய ஐடியாக்கள் பிறக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களால் அங்கீகரிக்கப்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். சாகச நிகழ்வுகளில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.