Advertisment

Rasi Palan 11th December 2018: இன்றைய ராசிபலன்

Daily Rasi Palan Tamil, Dec 11, 2018: ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் கிரக நிலைகளை பொறுத்தே இன்ப, துன்பங்கள் நிகழும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan Today: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 11th December 2018 in Tamil : இல்லாத ஒன்றை உருவாக்குவதும், இருக்கும் ஒன்றை இல்லாமல் போகச் செய்வதுமே இயற்கையின் சக்தி. அந்த இயற்கைக்கு முன்பு எதுவுமே பெரிது கிடையாது. அந்த இயற்கையே கடவுள்.

Rasi Palan 11th December 2018 : இன்றைய ராசி பலன், 11 டிசம்பர் 2018

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

புதிதாக ஏதாவது இன்று கற்றுக் கொள்வீர்கள். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கிரக நிலைகளின் மாறுபாடே அதற்கு காரணம். மற்றவர்களை புரிந்து கொள்வதில் சிரமப்படுவீர்கள். இதனால், சில தேவையில்லாத சங்கடங்கள் உருவாக வாய்ப்புள்ளது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

குழப்பமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். வாழ்க்கை ஒரு டிராமா போல உங்களுக்கு தோன்றும். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் சுழன்றுக் கொண்டிருப்பீர்கள். நண்பர்கள் ஆதரவு நிறைய உண்டு.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

வெற்றிகரமான நாள் இது. சில தடைகள் அவ்வப்போது ஏற்பட்டாலும், எடுத்த செயலில் வெற்றி காண்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை இன்று வெகுவாக அதிகரிக்கும். அதுவே, உங்களை ஹீரோவாக்கும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்கள் ஆழ் மனதில் இருக்கும் டென்ஷனால், சில சமயங்களில் நிம்மதி இழப்பீர்கள். டென்ஷனை கடந்து வருவேன் என்று சொல்லி, அங்கேயே நிற்பீர்கள். கவனமாக, நிதானமாக செயல்படுங்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

குடும்ப உறவில் மகிழ்ச்சி தொடரும். உங்களின் சேமிப்பில் இருந்து செலவு செய்ய நேரிடும். சில காரணங்களால் அவ்வாறு நிகழலாம். காவல்துறையில் இருப்பவர்களுக்கு சில தொல்லைகள் ஏற்படும். பிள்ளைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மேலதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என எண்ணுவீர்கள். ஆனால், அதில் சில மொக்கைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. எதற்கும் தயாராக இருங்க. ஆனால், பெற்றோருக்கு ஏற்ற நல்ல பிள்ளை என பெயர் வாங்குவீர்கள். நிம்மதியான நாள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும் நாள் கிடையாது இது. ஆனால், வெகு விரைவில் அந்த நாள் உங்களை வந்து சேரும், காத்திருங்கள். நீங்கள் கொண்டாடுவதற்கென நாட்கள் அணிவகுத்து நிற்கின்றன.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

பல நாட்களாக வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்திருந்த பொருள் வாங்கும் அளவிற்கு பணம் வந்து சேரும். இதனால், நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணக்கில்லாத அளவிற்கு நிம்மதி அடைவீர்கள். நண்பர்களிடம் புளங்காகிதம் அடைவீர்கள். மன நிறைவான நாள் இது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

தட்றோம்... தூக்குறோம் என்றில்லாமல் சில நிதான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். உங்கள் குணாதிசயத்தைப் பார்த்து, உங்களிடம் நெருக்கம் காட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் தொடங்கும் முடிவு இருந்தாலும், ஒரு வாரத்திற்கு ஒத்தி வையுங்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்கள் பால்ய கால நண்பரை சந்திப்பீர்கள். மனம் நிம்மதியாக உணர்வீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதை இனிமேலாவது ஆராயுங்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

சில கடினமான முடிவுகளை இந்த காலக்கட்டத்தில் எடுக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் கிரக நிலைகளை பொறுத்தே இன்ப, துன்பங்கள் நிகழும். அதன்படி, உங்களுக்கு இது சோதனை காலம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

கதை எழுதுவதில் ஆர்வம் கொள்வீர்கள். பிரிந்து சென்ற உறவுகளிடம் மீண்டும் பேசும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியிடத்தில் எப்போதும் போல சுமூகமான சூழலே நிலவும்.

Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment