Today Rasi Palan, 11th July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 11th July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை 11, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
உங்களுடைய சமீபத்திய செயல்பாடுகளால் உங்களின் வருவாய் நிலைமை மேம்படும். உயர்ந்த நிலையை பெறுவீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்ட உங்கள் திறமைக்கு கிடைத்த வெற்றி இது. நிம்மதியான நாள் இன்று.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
பெற்றோர்களை உதாசீனம்படுத்தினால் வாழ்வில் ஏற்றம் இருக்காது என்பது நிதர்சன உண்மை. அது எல்லோருக்கும் பொருந்தும். உங்களுக்கும் பொருந்தும். உங்களுடைய முடிவுகளை மாற்றிக் கொள்வது நல்லது. எல்லோரது ஆலோசனைகளையும் அப்படியே கண்களை மூடிக் கொண்டு கேட்க வேண்டும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உடல் நிலை சீராகி சகஜ நிலைமைக்கு திரும்பி இருப்பீர்கள். சளித் தொல்லை நீங்கும். விரைவில் வெளியூர் செல்வதற்கான சூழல் ஏற்படும். பணியிடத்தில் ஓரளவு நிம்மதியான சூழல் நிலவும். பணப்பிரச்சனை நீங்கும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
பணியிடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். தீர ஆராய்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் அணுக பழகுவீர்கள். செலவுகளை குறைத்துக் கொள்வது உங்கள் நிதிநிலைமைக்கு நல்லது. வாயைக் கட்டுப்படுத்தினாலே பாதி செலவு குறைந்துவிடும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
உங்களுடைய தனித்திறமை கொண்டு உங்களால் புதிய படைப்புகளை உருவாக்க முடியும் என தெரியாதா? ஆனால், அதற்கான நேரத்தை செலவிடாமல் தேவையில்லாத வேளைகளில் ஈடுபட்டு கொண்டிருப்பீர்கள். இப்படியே போனால், உங்கள் நிலைமை என்ன ஆவது?
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உங்களுக்கு யாரும் உதவியாக இல்லை என்று எப்போது பார்த்தாலும் குறை சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். உங்களுக்கு என்ன தேவை, எது தேவை என்று சொன்னால் தான் அவர்களுக்கு தெரியும். அவர்களால் உதவி புரிய முடியும். உங்களை சுற்றி யார் என்ன யோசிக்கிறார்கள் என்பதை கிரகித்துக் கொண்டே இருங்கள். பின்னால் அது தேவைப்படும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
இந்த தருணம் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாகும். ஆந்த முன்னேற்றம் சீராக இருக்கும். உங்கள் தோல்விகளை ஏற்றுக் கொள்ள பழகியதால், இப்போது முன்னேற்றத்தின் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது, உங்களை விட வேறு எவரும் சிறப்பான நிமிடங்களை அனுபவிக்கப் போவதில்லை.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உங்கள் வாழ்க்கையில் தற்போது கிடைத்துவரும் வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் தாங்கள் தான் காரணம் என மற்றவர்கள் நம்பிக் கொண்டு இருப்பார்கள். ஆனால், உங்கள் வெற்றியில் யாருக்கும் பங்கு இல்லை. அது முழுக்க முழுக்க உங்களுக்கானது. அப்படி நீங்கள் பங்கு கொடுத்தால் அது மோசமானது. வெற்றிகரமான நாள் இன்று.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
நீங்கள் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் பணிகளின் நிலவரம் குறித்து தீர ஆராய்ந்து கொண்டே இருங்கள். அதில், பல தடைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கவனமாக இருக்க வேண்டும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
கேளிக்கைகளில் செலுத்தும் நாட்டத்தை உங்கள் பணிகளில் செலுத்துங்கள். கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டங்கள் இது. அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேறும் எண்ணத்துடன் செயல்படுங்கள். சுமாரான நாள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
இரும்புத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். மாணவர்களின் கல்வித் தரம் உயரும். பணியிடங்களில் சில அசௌகரியமான நிகழ்வுகள் ஏற்படலாம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
மருத்துவ செலவுகள் ஏற்படும் நாள். உடல் நலனில் முடிந்த அளவு அக்கறையாக இருக்க வேண்டியது கட்டாயம். கண் தொடர்பான பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவு குறையும். சேமிக்கப் பழகுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.