Rasi Palan 11th June: இன்றைய ராசிபலன், முள் பாதைகளை நினைத்து அஞ்ச வேண்டாம்!

Rasi Palan Today, 11th June Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 11th June 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 11th June 2019 : இன்றைய ராசி பலன், ஜூன் 11, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

இன்று உங்களால் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாது. உங்கள் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரது தலையீடும் அதில் இருக்கும். ஒரு நிமிடத்தில் அனைவரும் ஜோலியை முடித்துவிட்டு சென்றுவிடுவார்கள். உங்களையும் முடித்துவிட்டு தான் செல்வார்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

எப்போதும் போல், உங்களால் உங்கள் இல்லத்தில் ஆட்சி செய்ய முடியாது. குழப்பங்களும், மன உறுதியின்மையும் உங்கள் முன்னேற்றத்தை தடுப்பதில் பங்கு வகிக்கும். தக்க நேரத்தில் செயல்படாமல் தடுமாறுவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

பொருளாதார ரீதியில் நிச்சயம் இன்று உங்களுக்கு ஒரு சோதனை காலம் தான். நெருப்பென்று சுட்டுவிடாது. நாம் தான் தீ மூட்ட வேண்டாம். உங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய நீங்கள் தான் உழைக்க வேண்டும். முள் பாதைகளை நினைத்து அஞ்ச வேண்டாம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பேச்சு வார்த்தையின் மூலமே எதற்கும் தீர்வு காண முடியும் என்பதை சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த உண்மையை நீங்கள் உணர்ந்து கொண்டால் அது உங்கள் அளவில் முன்னேற்றம் தான். நீங்கள் மூர்கத்தனமாக நடந்து கொண்ட சில சம்பவங்களுக்கு நீங்களாகவே மன்னிப்பு கேட்டுவிடுவது நல்லது.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உங்களுக்கான நாள் இது. விடை தெரியாமல் இருந்த பல தருணங்கள் மீது இன்று வெளிச்சம் பாயவிருக்கிறது. அது உங்களை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும். யாராக இருந்தாலும், காத்திருக்க சொல்லிவிட்டு உங்களுக்கான தருணங்களை அனுபவியுங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

தள்ளிபோய்க் கொண்டிருந்த திருமண அம்சம் விரைவில் கைக்கூடும். கவலை வேண்டாம். உங்களுக்கு திருமண திசை இப்போது இருக்கிறது. அதேபோல், காதலும் கைக்கூடும். துணிந்து காதல் சொல்லுங்கள். ஆல் தி பெஸ்ட்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

துன்பங்களுக்கு சற்று விடை கொடுங்கள். அவை ரெஸ்ட் எடுக்கட்டும். இன்பங்களை இன்று ருசித்துப் பார்ப்பீர்கள். உங்கள் துணையின் வழியே. இன்றைய நாளுக்கான இன்பம் தொடங்கும். உடல் நலத்தில் மட்டும் சிறிது அக்கறை காட்டுங்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

யாருக்காவும், எதற்காகவும் உங்கள் முடிவுகளில் இருந்து பின் வாங்காதீர்கள். அது நிச்சயம் உங்களின் தரத்தை அசைத்துப் பார்க்கும். வீண் விவாதங்கள் வேண்டாம் நண்பர்களே. நேரத்தை வீண் செய்யாதீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

மகிழ்ச்சிகரமான நாள். வெற்றி உங்களைத் தேடி வரும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டாகும். சேமிப்பு கை கொடுக்கும். காதல் கைகூடும். குடும்ப உறவில் நிம்மதி நிலவும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பணிச் சூழல் சவால்கள் நிரம்பியதாக இருக்கும். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் விவாதத்தில் ஈடுபடுவீர்கள். வேலை இழப்பிற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. பாதுகாப்பின்மை உணர்வு மேலோங்கி இருக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

இன்று பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள் அல்ல. பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. ஏற்ற இறக்கங்களை காண்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

செயல்களின் முன்னுரிமையை உணர்ந்து அதன்படி வினையாற்றுங்கள். இன்று பணவரவுடன் செலவும் சேர்ந்து காணப்படும். சீரான நிதிநிலைமையை தக்கவைத்துக் கொள்ள திட்டமிடல் அவசியம்.

Get all the Latest Tamil News and Horoscope in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Rasi Palan by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close