By: WebDesk
Updated: November 11, 2018, 5:00:32 AM
Today Rasi Palan : இன்றைய ராசி பலன்
Rasi Palan Today 11th November 2018 in Tamil : வாழ்வில் நமது ஒவ்வொரு செயலுக்கும் பின் விளைவுகள் உண்டு. நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகள், தீய செயல்களுக்கு தீய விளைவுகள். இதுவே சத்தியம்.
Rasi Palan 11th November 2018 : இன்றைய ராசி பலன், 11 நவம்பர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
கூட இருப்பவர்களின் சூழ்ச்சிகளை புரிந்து கொள்ளும் பக்குவம் இருந்தால் நீங்கள் தான் ராஜா. இன்று கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவழியுங்கள். வெளியே செல்வதை முடிந்தளவு தவிருங்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
சுறுசுறுப்பு இன்று மேலோங்கி இருக்கும். நல்ல தெளிவான மனநிலை இருக்கும். இறுக்கமான சூழ்நிலை அதுவாகவே அகலும். வெற்றி உள்ளங்கையில் வீற்றிருக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
ஆசைகளை அடக்க வேண்டிய நாள். சுருக்கமாக சொல்லவேண்டுமெனில், கட்டுப்பாடோடு இருக்க வேண்டிய நாள். யோகா, கடவுள் வழிபாடு, நண்பர்கள் என நேரத்தை செலவிடுங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
வெற்றிகள் வந்தாலும், கூடவே ஒரு தொல்லையை அழைத்து வரும். எனவே, நிதானம் தேவை. உடல்நிலையில் அக்கறை தேவை. எதற்கும் உடல்நிலை குறித்த ஒரு முழு சோதனை செய்து கொள்வது நன்று.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
ஆஞ்சநேயர் வழிபாடு நல்லது. அருகில் இருக்கும் ஏதாவது ஒரு ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழி பட்டால் சிறப்பு. வேலை தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
இல்லற வாழ்க்கையில் திடீர் இனிப்பு உருவாகும். மாற்றங்களை உணர்வீர்கள். காதலர்களின் நெருக்கம் அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துச் சென்றால், இன்று போல் ஒரு மகிழ்ச்சியான நாள் கிடையாது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
எலக்ட்ரிக்கல் துறையில் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. ரயிலில் வெளியூர் செல்ல நேரிடலாம். அது திடீர் பயணமாக அமையும். திருமண தேதி முடிவாக வாய்ப்புள்ளது. இன்பமான நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
செலவை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். வீண் விவாதங்களில் தலை காட்ட வேண்டாம். அது உங்களுக்கே எதிராகக் கூட திரும்ப வாய்ப்புள்ளது. பெண் சுகம் வெறும் மாயை என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிட்டும். வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு நகர இது முதல் புள்ளியாக இருக்கலாம். சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு இருப்பதால் யாரும் உங்களை ரசிக்கப் போவதில்லை.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
நான் தான் ராஜா என்று நீங்கள் நினைக்கும் வரை உங்கள் பக்கம் வெற்றி வரவே வராது. அவமானங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் வேண்டும். உங்கள் முயற்சிகள் வெற்றிப் பெற இன்றைய நாள் உதவாது என்பதே உண்மை.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
இனிப்பு பலகாரங்களை தவிர்ப்பது நல்லது. அது உங்கள் உடல் நலத்திற்கு இப்போதைக்கு ஆகாது. முடிந்தவரை வீட்டில் செய்த உணவுகளையே சாப்பிட்டால் சிறப்பு. மேலோட்டமான நாள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
வெற்றி உங்களுக்காக காத்திருக்காது. நீங்கள் தான் அதை நோக்கிச் செல்ல வேண்டும். உங்களது உழைப்பு போதாது. இருப்பினும், பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்க வாய்ப்புள்ளது.