Advertisment

Rasi Palan 12th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 12th July Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 12th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan 12th July: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 12th July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 12th July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை 12, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

நிதி நிலைமை மோசமாக இருந்தாலும், அதை சமாளிக்கக் கூடிய திறமையும், பக்குவமும் உங்களிடம் இருக்கும். நண்பர்களின் ஆலோசனை உங்களை மேம்படுத்தும், வழிகாட்டுதலாக அமையும். சிறப்பான சம்பவங்களை இன்று காண்பீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்கள் வழிப்படி தான் செயல்பட்டுக் கொண்டிருப்பீர்கள். ஆனால், அதில் தடைகளும் இருக்கும் என்பதை மறக்க வேண்டாம். சமீபத்திய நிகழ்வுகள் உங்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

இன்றைய நாள் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கப் போகிறது. நீங்கள் கை வைக்கும் வேலைகள் விரைவாகவே முடியும். நீங்கள் நம்பாதவர்கள் கூட, இன்று உங்களை ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு பணி புரிவார்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

மகிழ்ச்சியான நாள். உங்களுக்கு பிடித்த வேலையை செய்வீர்கள். அது கடினமானதாக இருந்தாலும், உங்களை வருத்திக் கொண்டு சிறப்பாக செய்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. செலவுகள் ஒரு பக்கம் இருந்தாலும், உங்கள் உழைப்பின் பயனாய் வரவும் இருக்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

சில கடினமான சூழல்களை இன்று சந்திப்பீர்கள். அதனுடன் போராடுவீர்கள். ஆனால், தோற்கமாட்டீர்கள். இதுவே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தானே!. பெற்றோர்களின் வழிகாட்டுதல் உங்களை சிக்கலான நிலையில் இருந்து தற்காத்து கொள்ள உதவும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உங்களது ஆளுமை எப்போதும் முதன்மையாகா இருக்காது என்பது மனதில் கொள்ளுங்கள். உங்களது ஆட்சி கிரக நிலையின் தன்மையைப் பொறுத்தே அது அமையும். தற்காலிக வெற்றிகள் உங்களுக்கு பெரிதளவில் லாபத்தை கொடுக்காது. ஆனால், யாரிடமும் சென்று நிற்க வேண்டிய சூழல் உங்களுக்கு உருவாகாது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மறதி ஒரு தேசிய நோய் என்று பொதுவாக சொல்வார்கள். அது உங்களுக்கும் பொருந்தும். கொஞ்சம் பொறுப்புடன் கவனமாக இருங்கள். ஏனெனில், சில பணிகளின் போது, உங்கள் மறதி உங்களுக்கு எதிரியாய் உங்கள் முன் வந்து நிற்கும். நிதானமாய் ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

மன அழுத்தம் காரணமாக சில இடர்பாடுகளை சந்திப்பீர்கள். சில சறுக்கல்களையும் சந்திப்பீர்கள். கவலை வேண்டாம். இன்று சில ஏமாற்றங்கள் இருந்தாலும், விரைவில் அந்த நிலை மாறும். காட்சிகள் மாறும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

கடவுள் வழிபாடு உங்களுக்கான சவால்களை எளிமைப்படுத்தும். தீர்க்கமான உங்களது முடிவுகளில் சில தோல்விகள் ஏற்படலாம். மனைவி, பிள்ளைகள் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவீர்கள். மனைவி மீதான உங்கள் அன்பு அதிகரிக்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்கள் பணியிடத்தில் இன்று கொண்டாட்டம் தான். நீங்கள் செய்யத வேலைக்கு கூட நல்ல பெயர் வாங்குவீர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தீவிர யோசனைக்கு பிறகு நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றியைக் கொடுக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

கடனை முடிப்பதோடு மட்டுமில்லாமல், வரவுகளை அதிகரிப்பதற்கான முயற்சிலும் ஈடுபடுவீர்கள். வரவும் இருக்கும். ஓய்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணினால், ஓய்வு எடுத்துவிடுங்கள் . ஏனெனில், உடல் நலத்தில் கொஞ்சம் அக்கறையோடு இருக்க வேண்டிய நேரம் இது.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருப்பர்வர்களுக்கு இன்று நல்ல செய்தி கிட்டலாம். கடல் கடந்து நீங்கள் பிராயணம் செய்வதற்கான அமைப்பு உங்களுக்கு கைக்கூடுகிறது. உங்களுக்கு இப்போது வெற்றி என்பது அவசியம் என்றாலும், தோல்வி உங்களை நெருங்காது.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment