Rasi Palan 12th March 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 12th March 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 12th March 2020: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rasi palan june 29

rasi palan june 29

Today Rasi Palan, 12th March 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 12th March 2020 : இன்றைய ராசி பலன், மார்ச் 12, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

Advertisment
Advertisements

உங்கள் நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். சில சமயங்களில் அவை உங்களுக்கு கைக்கொடுக்கலாம். உங்களுக்காக யாரும் காத்திருக்க மாட்டார்கள். அதேபோல், உங்களுக்காக நிமிடங்களும் எப்போதும் காத்திருக்காது. அதுவாக வரும் போதுதான் எல்லாமே.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்கள் நீண்ட நாள் கனவு நிறைவேறும் காலத்தை எதிர்நோக்கலாம். அடுத்தடுத்த முயற்சிகள் உங்களை அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்லும். உங்கள் துணையின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மாற்றத்துக்காக நீங்கள் காத்திருப்பீர்கள். ஆனால், சர்ச்சைகள் உங்களை சூழ்ந்து கொள்ளும். ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். குறிப்பாக, சனிக்கிழமைகளில். சில துன்பங்கள் விலகும். சேமிப்புகள் கரையும் சூழலும் உருவாகலாம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்கள் கருத்துகள் இனிமேல் வெற்றியடைய துவங்கும். உங்கள் ஆலோசனைகள் உங்கள் மேலதிகாரிகளை ஆர்வப்படுத்தும். உங்கள் மீது புதிய நம்பிக்கையை உருவாக்கும். சில நிதர்சனங்களை உங்கள் நண்பர்கள் வாயிலாக கண்டறிவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

கேட்பதற்கு ஆள் இல்லை என்பதற்காக, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றால் என்ன சொல்ல. உங்களை மீறிய ஒரு சக்தி உள்ளதென்பதை மறந்து விடுவது உத்தமமா? கவனம் வேண்டும். உங்கள் கல்வியில் மேம்பாடு ஏற்படும். சுயமாக யோசித்து செயல்படும் நாட்களை இனி சந்திப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

வெளிநாடு செல்லும் யோகம் கைக்கூடுகிறது. உங்கள் வெற்றி மற்றவர்களை ஆச்சர்யப்படுத்தும். நிதானமான நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியும், அதன் முழு பலனை உங்களுக்கு கொடுக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கருத்து வேறுபாடு காரணமாக தவறான புரிந்துணர்வு காணப்படும். உங்கள் துணையின் கருத்துக்களை புரிந்து கொண்டு இருவரும் பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

தனிப்பட்ட உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கிரக நிலைகளின் செயல்பாடுகளால் உங்களது சில உறவுகளின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். அடுத்தவர்கள் உங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியது நிறைய இருக்கிறது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

இன்று நீங்கள் பதட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வளர்ச்சி குறித்த உங்கள் முயற்சிகளில் முன்னேறிச் செல்லுங்கள். உங்கள் மனதில் நம்பிக்கையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள் இது. உங்கள் பணியிடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வினையாற்றுவதற்கு முன்பு யோசித்து செயல்படுங்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

இன்றைய நாள் உங்களுக்கு மிக எளிதாக அமையும். வழக்கத்தைவிட அது மிருதுவானதாக இருக்கும். மற்றவர்களின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும், வாழ்த்துகளையும் நீங்கள் எந்த அளவிற்கு எடுத்துக் கொள்கிறீர்களோ அந்தளவிற்கு நீங்கள் முதிர்ச்சியடைவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மற்றவர்களை நம்பாமல் உங்களை நம்ப வேண்டிய நேரமிது. உங்கள் தொழில் பார்ட்னர்கள் கூட உங்களுக்கு உதவுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. உங்கள் கைகளே உங்களுக்கு உதவி.

Rishabam Rasi Palan Meenam Rasi Palan Kanni Rasi Palan Midhunam Rasi Palan Simmam Rasi Palan Kumbam Rasi Palan Magaram Rasi Palan Dhanusu Rasi Palan Viruchigam Rasi Palan Thulam Rasi Palan Kadagam Rasi Palan Mesham Rasi Palan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: