Rasi Palan 13th April 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 13th April 2020: இன்றைய ராசிபலன்

By: Updated: April 13, 2020, 12:30:26 AM

Today Rasi Palan, 13th April 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 13th April 2020: இன்றைய ராசி பலன், ஏப்ரல் 13, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

எந்தவொரு விசயங்களிலும் தீவிர முன்யோசனையுடன் இறங்குவது நல்லது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற சொலவடையை மறந்துவிட வேண்டாம். முன்னெச்சரிக்கை உணர்வு தேவைப்படும் நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டவேண்டிய நாள். முக்கியத்துவம் உணர்ந்து செயல்களில் ஈடுபடுவது நல்லது.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

விரயங்கள் அதிகம் ஏற்படும் என்பதால் நிதி விவகாரங்களில் அதிக கவனம் தேவைப்படும் நாள். வார்த்தைகளில் நிதானம் கடைபிடிப்பதால், மற்றவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

எதிர்கால தேவைகளுக்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். நிதி விவகாரத்தில் திருப்தி நிலை நிலவும். வரும்காலம் வசந்தகாலம் என்பதில் நம்பிக்கை கொள்வீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நிதி விவகாரங்களில் மற்றவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மற்றவர்களிடம் பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்வீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

பணியிடங்களில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மற்றவர்களின் அந்தரங்க விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பழைய நிகழ்வுகளிலிருந்து அனுபவ அறிவை பெறுவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கிரகங்களின் சாதகமான பார்வையினால், திட்டமிட்ட காரியங்கள் எண்ணியபடி நடக்கும். பொது விவகாரங்களில் அக்கறை செலுத்துவீர்கள். வெற்றி இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

மறைமுக எதிரிகளினால் பல்வேறு இடர்பாடுகளை சந்திப்பீர்கள். பிரியமானவர்களால் சந்தோஷ செய்தி அளிப்பீர்கள். புதிய வாய்ப்புகளினால் மனம் மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நிதி விவகாரங்களில் அதிக கவனம் வேண்டும். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். நீண்டகால விவகாரங்களுக்கு தீர்வு காண முயல்வீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வெற்றி கனவுகளை நோக்கி வீறுநடை போடுவீர்கள்.வரும்காலம் வசந்தகாலம் ஆக இருக்கும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

நிதி விவகாரங்களில் அதிருப்தி நிலை நிலவுவதால், அதிக கவனம் அவசியம். வாழ்க்கை கடினமானது என்பதால் ஜாக்கிரதை வேண்டும். பெண் நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

நிதி விவகாரங்களில் அதிக கவனம் வேண்டும், உங்கள் உரிமைகளை பெற போராட வேண்டியிருக்கும்.வெற்றி இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook

Web Title:Rasi palan 13th april 2020

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X