Today Rasi Palan, 13th August 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 13th August 2020: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 13, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
சின்ன சின்ன சிக்கல்களும் உங்களை விட்டு அகலும். பெற்றோரின் உதவி கிடைக்கும். அவர்களின் ஆலோசனை உங்கள் மரியாதையை உயர்த்தும். சில முடிவுகளில் சறுக்கல்கள் இருந்தாலும் பெரிதாகக் கவலை கொள்ளத் தேவையில்லை.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
தொழில் ஆரம்பிக்க உகந்த நாள் இன்று. புதிய ஐடியாக்கள் இருந்தால் இன்று அமல்படுத்த முயற்சி செய்யுங்கள். பலன் கிடைக்கும். குடும்பத்தில் சிக்கல் விலகும். பணியில் நீடித்த பிணியும் விலகும், பனியால் பிடித்த பிணியும் விலகும். உடல் நலத்தில் ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டாலும் அதற்கேற்ப சலுகையும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
நிம்மதியான நாள். தலைவலி கொடுத்துவந்த தொல்லை அகலும். கிரகநிலை உங்களுக்கு சாதகமாக இனி திரும்பும். நண்பர்களின் உதவி கிடைக்கும். அதனால், நன்மையும் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் மீதான மரியாதை இரு மடங்கு அதிகரிக்கும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
தூக்கமில்லாத இரவுகளை சந்திக்க நேரிடும். அதை நீங்கள் வெல்ல முயற்சித்தாலும், திட்டம் தோற்றே போகும். உங்கள் துணை உங்களை குழப்பத்திலேயே வைத்திருப்பார்கள். அனுகூலம் இல்லாத நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உங்களுக்கு ஆர்வமில்லாத ஒப்பந்தங்களுக்கு ஏன் நீங்கள் அனுமதி அளித்தீர்கள் என்று உங்களுக்கே புரியாது. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு, அவர்களது அன்பை சம்பாதிக்க வேண்டிய நேரம் இது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
உங்கள் துணை என்ன சொல்கிறார்கள் என்பதை காது கொடுத்து முதலில் கேளுங்கள். அவர்களது ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்வது நன்று. சில சமயம் அவர்களுக்கு நீங்கள் மதிப்பளித்தே இல்லை. நிதி தொடர்பான திட்டங்களை முறையாக செயல்படுத்துவீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
வீட்டிலிருந்தோ, அலுவலகத்தில் இருந்தோ உங்களுக்கு நிறைய சவால்கள் இன்று ஏற்படும். அதனை வென்று வரும் தன்னம்பிக்கை உங்களிடம் உள்ளது. எதிர் கேள்விகள் மூலம், உங்கள் திறமையை உணர்த்துவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
உங்கள் வீட்டை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள அடுத்தடுத்த முயற்சியை மேற்கொள்வீர்கள். இன்று வெற்றிகரமான நாள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
இன்று உங்களுக்கு அமானுஷ்யமான நாள் போன்று தோன்றும். பயப்பட வேண்டாம். அப்படியொரு ஆச்சர்யங்கள் கலந்த நிகழ்வுகள் அரங்கேறும். ஆனால், அது உங்களை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கும். நிதி நிலைமை கட்டுக்குள் இருக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
சுய கட்டுப்பாடு என்பது மிக மிக அவசியம். உங்கள் சுதந்திரம் எங்கும் பறிபோய்விடாது. அதை யாரும் பறித்துச் சென்று விடமாட்டார்கள். ஆகையால், வீண் பேச்சுகளை தவிர்த்து காரியத்தில் கண்ணாய் இருங்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
அதிர்ச்சிகளும், கடினமான சூழ்நிலைகளும் உங்களை கடுமையான சோதனைக்கு உள்ளாக்கும். ஆனால், உங்கள் கைகளில் தான் வெற்றி உள்ளது என்பது திண்ணமாக நம்புவீர்கள். வெற்றி நிச்சயம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil