Rasi Palan Today 13th December 2018 in Tamil : இந்த உடலில் உருவான எந்த உயிரும் ஒருநாள் உதிர்ந்தே தீரும். அதைத் தடுக்க யாராலும் முடியாது. எந்த சக்தியாலும் முடியாது. ஆனால், அந்த உயிரின் கர்மா அதனை துரத்திக் கொண்டே இருக்கும். எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும், அது தொடரும்.
Rasi Palan 13th December 2018 : இன்றைய ராசி பலன், 13 டிசம்பர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
சில இடங்களில் அமைதியாக செல்வதே சிறந்தது. அது உங்களை பிரச்சனைகளில் இருந்து காக்கும். இருக்கும் வேலையை விட்டு விட்டு அடுத்த பணிக்கு முயற்சி செய்யாதீர்கள். உங்களின் வெற்றிவாய்ப்பு சற்று குறைவாக உள்ளது. இருக்கின்ற பனியின் மிக கவனமுடன் செயல்படுங்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
எச்சரிக்கை உணர்வு இல்லாததால் தான், சில சமயங்களில் நீங்கள் சரிவுகளை சந்திக்க நேரிடுகிறது. எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்வது உங்களுக்கு ஆபத்து. உடல்நிலையில் நிச்சயம் அக்கறை வேண்டும். பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட வேண்டாம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
கலைத்துறையில் இருப்பவர்களின் ஆளுமை அதிகரிக்கும். பணவரவும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியின் மீதிருந்த ஆர்வம் அதிகரிக்கும். கணக்கு வழக்குகளில் கோட்டை விடுவீர்கள். ஏமாறாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
படிப்படியாகத் தான் வெற்றி கிட்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்றங்கள் மெதுவாக இருந்தாலும், நிச்சயம் நடக்கும். அதை யாராலும் தடுக்க முடியாது. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு விளக்கு போடுங்கள். சுபிட்சமாக இருக்கும் வாழ்க்கை.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
எந்தவொரு விஷயமும் முடிவதற்குள்ளே அவசரப்பட வேண்டாம். கண் பார்வையில் சிறிய அளவில் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆசிரியர்களிடம் இருந்து நல்ல பெயர் வாங்குவீர்கள். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். பெரிதாக இல்லையென்றாலும், திருப்தி அடையும் அளவிற்கு பாராட்டு உறுதி.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பணவரவு சிறப்பாக இருக்கும். எதிர்கால திட்டங்களுக்கு அது உதவும். சேமிப்பு உயரும். கடல் வழியே பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டலாம். சில வெற்றிகள் உங்கள் கதவை தட்டும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
நண்பர்களின் வழியே சில ஆச்சர்யங்கள் காத்திருக்கிறது. உங்களது அடம் பிடிக்கும் குணத்தால், சில இழப்புகளை சந்திக்க நேரிடும். புதிய வீட்டு மனை வாங்கும் சிந்தனை இருந்தால், வெள்ளிவரை தள்ளிப் போடுங்கள். சீரான நாள் இது.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
சுற்றி சுற்றி சென்றாலும் கடைசியில் ஆரம்பித்த இடத்தில் தான் வந்து நிற்பீர்கள். உங்கள் கிரகம் அப்படி. வருந்த வேண்டாம். முன்னேற்றத்தை சிறிது காலத்தில் உணருவீர்கள். சர்க்கரை தொடர்பான உடல் உபாதைகள் உருவாக வாய்ப்புண்டு. உஷார்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
கருத்தியில் ரீதயாக உடன் பணிபுரிபவர்களிடம் மாறுபடுவீர்கள். இதனால், செய்யாத தவறுக்கு சில சமயங்களில் மன்னிப்பு கேட்க நேரிடும். அப்போது வரும் ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சோதனை காலம் இது. விரைவில் நல்ல நிலைக்கு செல்வீர்கள். அப்போது, அதை நினைத்து சிரித்துக் கொள்வீர்கள். சுதாரிப்பாக இருக்க வேண்டிய வாரம் இது என்று கூட சொல்லலாம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
பிரசவ நிலையில் உள்ள பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளிப் பயணங்களை விரும்பினாலும் செல்ல வேண்டாம். பணவரவில் சகஜ நிலை நீடிக்கும். வேலை வாய்ப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
சாதாரண விஷயம் தானே என்று எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் மௌனமாக இருப்பதால், அது தலைக்கனம் என்று பணியிடத்தில் சிலர் எண்ண வாய்ப்புண்டு. கிணற்றில் போட்ட தவளையாக அப்படியே இருக்காமல், புதிய முன்னேற்றத்தை நோக்கி நகருங்கள். ஏனெனில், உங்கள் அமைப்பின் படி, நல்ல முன்னேற்றத்தை உணருவீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
காதல் கைகூடும். விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை மண் கொடுக்கும். சீரான இடைவெளியில் முன்னேற்ற இருக்கைகள் உங்களை அலங்கரிக்கும். தைரியமாக நடை போடுங்கள்.