Advertisment

Rasi Palan 13th December 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan in Tamil 13th December 2019: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 13th December 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 13th December 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 13th December 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 13th December 2019: இன்றைய ராசி பலன், டிசம்பர் 13, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

தொலைதூர நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து அனுகூலமான செய்தி வரும். விடுமுறைக்கால பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். மனமகிழ்ச்சி ஏற்படும் நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மனசஞ்சலம் அதிகரிக்கும் நாள். அன்றாட நடவடிக்கைகளை மாற்றிச்செய்வதனால், சிறிது ஓய்வு கிடைக்கும். பணிச்சுமையினால் அவதிப்படும் நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நிதி தொடர்பான விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படும். கிரகங்களின் சாதகமற்ற பார்வையினால், செயல்களில் அதிருப்தி நிலையே நிலவும். எடுத்த முடிவுகளில் மாற்றம் மேற்கொள்வீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இந்த சந்தோஷம் அதிகநாட்கள் நீடிக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்வீர்கள். மன அமைதிக்கு தியானம் சிறந்த தீர்வாக அமையும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

செயல்களில் அதிக கவனம் அவசியம். சோம்பலை தவிர்ப்பது நல்லது. சிறிய விசயங்களிலும் அதிக கண்காணிப்பு தேவைப்படும் நாள். எதிர்பாராத திருப்பங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

நடப்பு பிரச்னைக்கு, கடந்த கால அனுபவங்களிலிருந்து தீர்வு காண முயல்வீர்கள். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். நண்பர்களுடனான தொடர்பு மற்றும் அவர்களுடனான விவாதங்களில் உங்கள் கை ஓங்கியிருக்கும். பிரியமானவர்களிடம் மனம்விட்டு பேசுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும். அந்நியர்களால் அனுகூலம் உண்டு. வார்த்தைகளில் நிதானம் கடைப்பிடிப்பது நல்லது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுநலமாக இருப்பீர்கள். மனமகிழ்ச்சி அடைவீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

நிதிவிவகாரங்களில் அதிக விழிப்புணர்வுடன் இருப்பதால், இழப்பை தவிர்க்கலாம். மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பது பலவகைகளில் நல்லது. மன அமைதிக்கு தியானம் செய்யவும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பணியிடங்களில் சக ஊழியர்களிடமிருந்து வந்த பிணக்குகள் ஒவ்வொன்றாக மறைய துவங்கும். எந்த செயலையும், ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மனசஞ்சலம் அதிகரிக்கும் என்பதால் தியானம் உள்ளிட்டவைகளை மேற்கொள்வது நல்லது. மற்றவர்களின் கருத்துகளிலிருந்து அதிகம் வேறுபடுவதால் குழப்பமான மனநிலையிலேயே இருப்பீர்கள். உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.

பிரபலங்கள், ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ரஜினிகாந்த்!

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment