By: WebDesk
Updated: January 13, 2020, 12:30:38 AM
Rasi Palan 13th January 2020: இன்றைய ராசிபலன்
Today Rasi Palan, 13th January 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 13th January 2020: இன்றைய ராசி பலன், ஜனவரி 13, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
பொருளாதார சிக்கலில் இருந்து நிரந்தர தீர்வு உடனே கிடைக்காது. ஆனால், மோசமான சூழலை கையாளும் பக்குவமும், நிதி சேமிப்பும் ஒருங்கப் பெற்றிருப்பீர்கள். உங்களை விட இள வயதுக்காரர்கள் என்றாலும் அவர்களின் பேச்சை கேட்கலாம், ஒன்றும் தவறில்லை.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
இறுதியில் உண்மை ஒருநாள் வெளியாகும். வேறொரு புது உறவு மிக நெருக்கமாக ஒட்டிக் கொள்ளும். மன அழுத்தத்தில் இருக்கும் தனிமை இந்த வாரமும் தொடரும். கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்கள் அறிவுக்கும், புத்திசாலித்தனத்துக்கும் இந்த வாரம் ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கும். பெற்றோர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். அவர்கள் உங்கள் அன்பை பெற ஏங்குவார்கள். அது உங்களுக்கு புரியாது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
கடந்த நான்கு மாதங்களாகவே உங்களைச் சுற்றி நிகழும் மாற்றத்தை கவனித்துக் கொண்டிருப்பீர்கள். அதை ஆராய்வீர்கள். அதிலிருந்து தோன்றும் பதில் உங்களை ஆச்சர்யப்படுத்தும், அடுத்த கட்டத்தை நோக்கி நகர வைக்கும். பெரும் பாய்ச்சலைக் கொடுக்கும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
இது நீங்கள் பிஸியாக இருக்கும் தருணம். ஆனால் அது கற்பனை நிறைந்தது. ஒருவித பதட்டம் எப்போதும் தொற்றிக் கொண்டிருக்கும். அதற்கெல்லாம் அஞ்ச வேண்டாம்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
மாற்றத்தை நோக்கி பாஸிட்டிவாக பயணம் செய்யும் உங்களுக்கு சில இடையூறுகள் கொண்ட தருணம் அமையும். நண்பர்களுடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
தலைகீழாக நின்றாலும், இன்று நீங்கள் நினைத்தது நடக்காது. அதற்காக கவலை கொள்ள வேண்டாம். வெரைட்டியாக பிரச்சனைகள் வந்தாலும் விட்ட விளாச பழகிக் கொண்டால் போதும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
அன்பு தேடி வரும். ஏன் வருகிறது என்று ஆராயாமல் அனுபவியுங்கள். அதை திருப்பிக் கொடுக்க வேண்டியது உங்கள் கடமையல்லவா. பணியிடத்தில் உங்களால் முடிந்த அளவுக்கு உங்கள் சிறப்பை கொடுத்துவிடுங்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
சரியான நேரத்திற்காக காத்திருப்பீர்கள். அதற்கு இன்று மிகச் சரியான நாள். உங்கள் படைப்புகளை வெளிக்காட்டுங்கள். வெற்றி நிச்சயம். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு தான். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சியான நாள் இது.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உடல் ஆரோக்யத்தில் முன்னேற்றம் இருக்கும். பிரச்சனைகளில் இருந்து வெளியேற, பெற்றோர்கள் துணை புரிவார்கள். திருமணம் நடக்காமல் இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
முடிந்த அளவு இன்று வாகனங்களில் செல்வதை தவிர்த்து விடுங்கள். கருத்து வேறுபாடு காரணமாக தவறான புரிந்துணர்வு காணப்படும். உங்கள் துணையின் கருத்துக்களை புரிந்து கொண்டு இருவரும் பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
சரியான திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் உங்களிடம் காணப்படும். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க செயலாற்றுவீர்கள். நீங்கள் தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு மிகுந்த பலனளிக்கும்.