Advertisment

Rasi Palan 13th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 13th July Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 13th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan 13th July: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 13th July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 13th July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை 13, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்களது சிறந்த முயற்சியை வெளிக் கொண்டு வர வேண்டிய நாள் இது. அப்போது தான் உங்களுக்கான அமைதியான நாளாக இன்று அமையும். தெளிவான இலக்குகளை நிர்ணயித்து சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

எந்த ஒரு செயலையும் ஏன் செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என ஆராய்ந்து செயல்பட்டால் உங்களின் வெற்றி உங்களை விட்டு எங்கும் சென்றுவிடாது. பெற்றோர், நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நல்ல பிள்ளையாக நடந்து கொள்வீர்கள். யாருக்காகவும் உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். இவ்வளவு உழைத்தும், உங்களுக்கு தகுதியான மதிப்பு கிடைக்கவில்லையே என்ற உங்களது வருத்தம் இனி நீங்கும். இன்றே நீங்கும். அனைத்தும் மாறுதலுக்குட்பட்டது என்ற உண்மையை விளங்கிக் கொண்டால் நல்லது.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும், அதை தகர்த்தெறிந்து முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள். உங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கையை யாராலும் உடைக்க முடியாது. ஆனால், செலவீனங்களை மட்டும் சற்று குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உங்களைச் சுற்றி நிகழும் எந்த சங்கடமான சூழல்கள் குறித்தும் அஞ்ச வேண்டாம். உங்களை அவைகளால் நிலை குலைய வைக்க முடியாது. குடும்ப விவகாரங்களில் இனி அதிக கவனம் செலுத்த வேண்டியது உங்களுக்கு அவசியம். உங்களுக்கு எது சரியெனபடுகிறதோ அதைச் செய்யுங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உங்களது சில முயற்சிகளில் சறுக்கல் இருந்தாலும், கவலை வேண்டாம். கடினமான காலக்கட்டங்களுக்கு பிறகு இப்போது அமைதியை வேண்டுவீர்கள். தோல்விகளை உங்களை சோர்வடைய வைக்கும். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், தற்போது ஓகே என்ற நிலையில் இருப்பீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்களுக்கு என்று சிக்கல்கள் வரும் போது, அதை எதிர்கொள்ள உங்களது ஒட்டுமொத்த குடும்பமும் திரண்டு நிற்கும். திரளான ஆதரவை பெறுவீர்கள்.அன்பையும், மரியாதையும் பெறுவீர்கள். உங்களுக்கான நிவாரணி நிச்சயம் உண்டு.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்கள் பணிகளை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். பழியை மற்றவர்கள் மீது சுமத்த எண்ண வேண்டாம். சோம்பேறித்தனத்தை தூக்கிப் போடுங்கள். மகிழ்ச்சியை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மனம் இலகுவாகும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்களது இன்றைய நாளில் அதிகமான நேர்மறை நிமிடங்களை பெறுவீர்கள். அதன் மூலம் உங்களின் பணி உச்சபட்ச வேகத்துடனும், தெளிவுடனும் இருக்கும். உங்களுக்கு பிடித்த இடத்தில் பணி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நல்ல செய்தியை எதிர்நோக்கி காத்திருங்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்களது சமீபத்திய செயல்பாடுகள் மூலம் வெற்றிகளை குவிப்பீர்கள். எதற்காகவும், யாருக்காகவும் உங்கள் சாகசங்களை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். உங்களைத் தேடி உங்கள் துணை வருவார்.ஏற்றுக் கொள்ள மறவாதீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்களின் நிதிநிலைமையை மேம்படுத்த, முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில் இருக்கிறீர்கள். அதை எவ்வளவு விரைவில் எடுக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் எடுத்தால் நல்லது. ஆனால், அதற்கு நீங்கள் தெளிவான பார்வையில் இருக்க வேண்டியது அவசியம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

முதன் முறையாக ஆன்மிகம் தொடர்பாக அதிகம் சிந்திக்க தொடங்குவீர்கள். யாரும் உங்களை முக்கியமாக நினைக்கவில்லையே என்று வருந்த வேண்டாம். அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை. உங்கள் பின்னாடி ஒரு கூட்டமே நிற்கும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment