scorecardresearch

Rasi Palan 13th July 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan july 13th, இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan july 13th, இன்றைய ராசிபலன்
Today rasi palan, rasi palan july 13th, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 13th July 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 13th July 2020: இன்றைய ராசி பலன், ஜுலை 13, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

இன்று மட்டும் உங்கள் கிரக நிலையை கவனமாக கையாண்டு, பொருளாதார சிக்கல்களை சமாளித்துவிட்டீர்கள் என்றால், இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு சுபதினம் தான். அடுத்த சில நாட்களில் சில ஆச்சர்யங்கள் உங்களைத் தேடி வரும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்கள் கட்டத்தில் நிலவின் ஆதிக்கம் இருப்பதனால், கற்பனை வளம் மிதந்தோடும். காதல் கைக்கூடும் வாய்ப்புள்ளது. அனைத்து செயல்களிலும் வெற்றிகளை எதிர்பார்ப்பீர்கள். எனினும், சில சாதக அலையை எதிர்பார்க்கலாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உண்மைகளுக்காகவே போற்றப்படுவீர்கள். உங்கள் திட்டங்களை எந்தவித சேதாரமும் இன்றி, முடிந்த வரை நாசூக்காக முடிவுரை எழுத முயற்சிப்பீர்கள். வெற்றிகரமான நாள் இன்று.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு பிரகாசமான நாள். எடுத்த செயலில் வெற்றியை காண்பீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் நிலவிய சின்ன சின்ன சங்கடங்கள் அகலும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நிதிநெருக்கடி உங்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும். நண்பர்களின் உதவி கிடைப்பதில் சுணக்கம் ஏற்படலாம். தேர்ந்தெடுத்து ஒப்பந்தங்களை மேற்கொள்ளுங்கள். நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து போட வேண்டாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கும். கால் வலி மற்றும் முதுகு வலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்து இருப்பீர்கள். அந்த நிலை மாறும். கிரக நிலைகளின் மாற்றங்களே அதற்கு காரணம்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

இன்று உங்கள் புத்துணர்ச்சியை சற்று ஆற்றல் குறைந்து காணப்படும். தொடர்ந்து உங்கள் பணியை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பீர்கள். பொறுப்புகளையும் உதாசீனம்படுத்துவீர்கள். விநாயகரை வழிபட்டு வாருங்கள், சிக்கல்கள் தீரும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

ஒவ்வொரு முறையும் உங்கள் தோல்விகளுக்கு நீங்களே ஒரு காரணத்தை தேடித் பிடித்து, அதை உண்மையென நீங்களே நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் யார் என்பதை விரைவில் அனைவரும் அறிவார்கள். செயலில் பொறுமை தேவை.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நம்பிக்கை தான் உங்களின் பெரும்பலம். யாருக்காகவும் உங்கள் வெற்றியை விட்டுக் கொடுத்துவிடாதீர்கள். நீங்கள் ஏமாற்றப்படலாம். உங்கள் வெற்றியால் உங்களுக்கு மகிழ்ச்சியோ, நிறைவோ ஏற்படாமல் கூட போகலாம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இது உகந்த நாள். இன்று நிதிநிலையில் நம்ப முடியாத அளவு பலன் இருக்கும். உங்கள் சொத்துக்கள் அதிகரிக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

இன்றைய நாள் அமைதியாக இருக்க பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்ளுங்கள். அதிக தண்ணீர் குடிப்பதும் எண்ணெய் பதார்த்தங்கள் தவிர்ப்பதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டால் தோல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்கள் ஆற்றலை பற்றி அனைவருக்கும் எடுத்துரைக்க, நீங்களே அதிகம் பேசி விளக்க வேண்டியிருக்கும். பேச வார்த்தைகளே இல்லை என்று உங்களுக்கு தெரிந்தும், விளக்க வேண்டியிருக்கும். ஆகையால், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அல்லது தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மீண்டும் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Rasi palan 13th july 2020 today rasi palan tomorrow rasi palan

Best of Express