Rasi Palan 13th June: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 13th June Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Rasi Palan 13th June: இன்றைய ராசிபலன்
Rasi Palan 13th June: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 13th June 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 13th June 2019 : இன்றைய ராசி பலன், ஜூன் 13, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

கல்வியில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். பிள்ளைகளின் படிப்பிலும் முன்னேற்றத்தை காண்பீர்கள். அவசர முடிவுகளால் கைவிட்டுப் போயிருந்த சொத்துகள், மீண்டும் உங்களை வந்து சேர வேண்டுமெனில், இம்முறையாவது நல்ல முடிவு எடுங்கள். விநாயகர் வழிபாடு இன்று உங்களுக்கு சிறப்பை கொடுக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

தள்ளிப்போட்டு வைத்த வேலைகளால் உங்களைச் சுற்றும் பாதிப்புகள், உங்களை மட்டுமல்லாது குடும்பத்தினரையும் பாதிக்கும். பணம் இன்று போகும், நாளை வரும். ஆகையால், யார் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மற்றவர்களையும் நேசிக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். நீங்கள் வீழ வேண்டும் என்று யாராவது நினைத்தால், அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை எனில், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

எதுவும் நிலையானது இல்லை என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ, உங்கள் வேலை முறையை மாற்ற வேண்டும். உங்கள் குறிக்கோளை அடைய முதலில் களத்திற்கு வர வேண்டும். ஓடுவதற்கு முன்பு முதலில் நடக்கப் பழக வேண்டும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

சந்திரன் உங்களை என்கரேஜ் செய்து, உங்கள் எதிர்காலத்தை எதிர்கொள்ள, உங்கள் சிந்தனைகளை தெளிவாக்கும். திட்டங்களை தீட்டும் போது, உங்கள் கற்பனைக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம். அது கெட்ட விஷயம் அல்ல.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மீண்டும் மீண்டும் எரிச்சலைத் தடுக்க உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும். நிதி நெருக்கடி உங்களை மிரட்டும் என நீங்கள் பயந்திருக்கலாம். ஆனால், இப்போது அவற்றிற்கு நீங்கள் ஓய்வு கொடுக்கலாம். கடந்த காலத்தில் உங்கள் சேமிப்புகள் கரைந்திருந்தால், இப்போது அந்த இயக்கம் தலைகீழாக மாறும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

வேலைகளில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பணவரவுகள் இருக்க வேண்டியிருந்தால், அதற்கான செயல்பாட்டில் ஈடுபடலாம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

செவ்வாய் உங்கள் ராசியில் மிக முக்கியமான இடத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. இதனால், சிற்சில எரிச்சலான சம்பவங்கள் நடைபெற துவங்கும். பெரிய தொல்லைகளின் அறிகுறியே இந்த சிறிய எரிச்சல்கள். இது கடினமான தருணம் தான். ஆனால், மிகவும் கடினமாக இருக்காது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்கள் பணிகளை உங்களைச் சுற்றி இருக்கும் மிகப்பெரிய கூட்டமே செய்து முடித்து உங்களுக்கு வெற்றியை தேடித் தந்துவிடும். இதனால், உங்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லை. சந்திரனின் ஆதரவு உங்களுக்கு இருப்பதால், மற்றவர்களின் பொறுப்புகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள தூண்டுதலாக அமையும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

தற்போது நிலவும் சூழ்நிலை, போட்டிகளை சமாளிக்க உங்கள் தனிப்பட்ட திறமைக்கு ஆதரவாக இருக்கும். உங்களுடன் பணிபுரிபவர்கள் இடம் மாறினால் ஆச்சர்யப்பட வேண்டாம். அவர்களின் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மைக்கு நீங்கள் பரிதாபப்படலாம். அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க முயற்சி செய்யுங்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

தாராளமாக உங்கள் ஐடியாக்களை அமல்படுத்துங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும் என்பதை மறக்க வேண்டாம். நீங்கள் யாரிடமும் கையேந்த தேவையில்லை. உங்களுக்கான முடிவுகளை அதிகாரத்துடன் நீங்களே எடுக்கலாம். ஒற்றை குறிக்கோளுடன் செயல்படுங்கள். வெற்றி உறுதி.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

சரியான மேற்பார்வையுடன் உங்கள் பணிகளை மேற்கொண்டால் உசிதம். நெருக்கமானவர்களை விட, நம்பிக்கையானவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். சளி பிரச்சனை நீங்கும்.

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasi palan 13th june

Next Story
Rasi Palan 12th June: இன்றைய ராசிபலன்Rasi Palan 12th June: இன்றைய ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com