Today rasi palan, rasi palan May 13th, இன்றைய ராசிபலன்
Today Rasi Palan, 13th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 13th May 2020: இன்றைய ராசி பலன், மே 13, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
வழக்கமான பணிகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். மற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
முக்கிய விவகாரங்களில் முடிவு எடுக்க வேண்டி இருப்பதால் அதிகம் உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்கவும். பிரியமானவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம். உடல்நலத்தில் அக்கறை தேவைப்படும் நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
முன்னேற்றப்பாதையில் வீறுநடை போடுவீர்கள். சட்ட விவகாரங்களில் விழிப்புணர்வு அவசியம். பணிகளில் அதிக கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உறவுகளிடையே மனஸ்தாபம் வரும் என்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது அதிக விழிப்புணர்வு அவசியம். ஒன்றுக்கு பலமுறை யோசித்து புதிய செயல்களில் ஈடுபடுவது நலம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
நிதி விவகாரங்களில் பங்காளிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். பண விசயங்களில் அதிக விழிப்புணர்வு தேவை. எதிர்பாராத திருப்பங்கள் அதிர்ச்சியளிக்கும். நல்ல விதைகளை விதைத்தால் மட்டுமே நற்பலன்களை அறுவடை செய்ய முடியும்.
நிதி விவகாரங்கள் சிக்கலானதாக இருப்பதால், மிகவும் கஷ்டப்படுவீர்கள். புதிய முயற்சிகளில் தற்போதைக்கு இறங்க வேண்டாம். மற்றவர்களின் கருத்துகளை ஏற்று நடப்பது நலம் தரும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
வெறுப்பை விலக்குவதனால், மற்றவர்கள் மீதான விறுப்பு அதிகரிக்கும். தவறை திருத்திக்கொள்வீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
எதிர்காலத்திற்காக முக்கிய திட்டங்களை வகுப்பீர்கள். சில விஷயங்களில் உடனடிப்பலன்கள் கிடைக்கும். நிதி விவகாரங்களில் அதிக கவனம் அவசியம். மறதியால் அவதிப்பட நேரலாம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
மற்றவர்களின் உரிமைகளை அறிந்து செயல்படுவீர்கள். மற்றவர்களுக்காக பொறுப்பு ஏற்பீர்கள். உரிமைக்காக குரல் கொடுப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
புதிய இலக்குகளை நோக்கி நடை போடுவீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்து விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். தன்னடக்கம் வெற்றி பெறுவதற்கான வழி என்பதை உணர்வீர்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட தயக்கம் காட்டுவீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil