Rasi Palan 13th November 2018: இன்றைய ராசிபலன்

Daily Rasi Palan Tamil, Nov 13, 2018: உங்கள் கற்கும் திறன் அதிகரிக்கும். மாணவர்களின் செயல்பாட்டில் நல்ல மாற்றங்கள் தெரியும்

Daily Rasi Palan Tamil, Nov 13, 2018: உங்கள் கற்கும் திறன் அதிகரிக்கும். மாணவர்களின் செயல்பாட்டில் நல்ல மாற்றங்கள் தெரியும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Daily Rasi Palan Tamil: இன்றைய ராசிபலன்

Daily Rasi Palan Tamil: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 13th November 2018 in Tamil : வாழ்வில் நமது ஒவ்வொரு செயலுக்கும் பின் விளைவுகள் உண்டு. நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகள், தீய செயல்களுக்கு தீய விளைவுகள். இதுவே சத்தியம்.

Rasi Palan 13th November 2018 : இன்றைய ராசி பலன், 13 நவம்பர் 2018

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

Advertisment

குழந்தை பராமரிப்பில் கூடுதல் கவனம் வேண்டும். எதையும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப் பட வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் போது, பொறுமையுடன் வாகனங்களை செலுத்துங்கள். மற்றபடி அனைத்தும் வெற்றியாகும் நாள் இது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மருத்துவம் சார்ந்த செலவுகளை நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் நாள். மன உறுதியுடன் போராடுவீர்கள். கைகளில் அரிப்பு சார்ந்த பிரச்சனை இருக்கும். மன அழுத்தம் காணப்படும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

கடந்த கால தொல்லைகள் நீங்கி, நம்பிக்கை பிறக்கும் தினம் இன்று. கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

Advertisment
Advertisements

உங்கள் துணை எப்படி இருந்தாலும், நீங்கள் உங்கள் பணியை செய்து கொண்டே இருப்பீர்கள். அதிகாரமிக்கவர்களிடம் இருந்து பிரச்சனைகள் வரும். நீங்கள் அப்போது அமைதியாக இருப்பது தான் ஒரே தீர்வு.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

இன்று உண்மையில் உங்களுக்கு அபாரமான நாள். இமய மலையில் வெற்றிக் கொடி நாட்டியது போன்று உணர்வீர்கள். யாருக்காகவும் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டாம். ஜெயம் உங்களுக்கே.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உங்கள் தன்னம்பிக்கையை சீர்குலைக்கும் நிகழ்வுகள் அரங்கேறும். அதற்காக, உங்கள் எதிராக திட்டமிடல்களை தள்ளிப் போட வேண்டாம். உங்கள் காதலில் சிறு பின்னடைவு ஏற்படும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களால் உங்களுக்கு பயன் கிடைக்கும். கேட்பதை வைத்து எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். சில விஷயங்களில் உங்களுக்கு தெளிவு ஏற்படாமல் இருக்கலாம். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இந்த நிலை மாறும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

முக்கியமான பணிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுங்கள். இவ்வளவு நாட்களாக தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு பயனற்ற முடிவுகளை அளித்து கொண்டிருந்தீர்கள். எமோஷனல் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்கள் கற்கும் திறன் அதிகரிக்கும். மாணவர்களின் செயல்பாட்டில் நல்ல மாற்றங்கள் தெரியும். ஊடகங்களில் பணியாற்றுவோருக்கு உயர் பதவிகள் கிடைக்கவோ, ஊக்கப் பரிசு போன்றவையோ கிடைக்க வாய்ப்புள்ளது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வெற்றிப் பெற வேண்டுமெனில், உங்கள் பணிகளை எவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டுமோ, அவ்வளவு சீக்கிரம் தொடங்குங்கள். அப்படி தாமதப்படுத்தினால், அது உங்கள் பார்ட்னருக்கோ, போட்டியாளருக்கோ சாதகமாக அமையும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

எதிர்கால திட்டமிடலை நோக்கி உழைப்பீர்கள். பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வினையாற்றும் உங்களுக்கு இன்றைய நாள் சுமாரான நாள். உடல்நலனில் அக்கறையாக இருக்க வேண்டும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்கள் நிதி நிலைமை அபாரமாக இருக்கும். ஆனால், உங்கள் தருணங்களை கவனமாக தேர்ந்தெடுங்கள். அப்போது தான் வெற்றியை வசப்படுத்த முடியும். ரொமான்ட்டிகான மூடில் இன்று இருப்பீர்கள்.

Rasi Palan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: