Rasi Palan 13th october 2020 : இன்றைய ராசிபலன்

rasi palan 13th October 2020 rasi palan today – இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan December , இன்றைய ராசிபலன், ராசிபலன்

Today Rasi Palan, 13th october 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 13th October 2020: இன்றைய ராசி பலன், அக்டோபர் 13, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

அறிவியலின் அற்புதமான கண்டுபிடிப்புகளில் ஒன்று தொலைநோக்கி. உங்களுக்கு எப்போதாவது தொலைநோக்கி மூலம் நட்சத்திரங்களைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் வாங்கி பாருங்கள். நீங்கள் சில மாயாஜால காட்சிகளைக் காண்பீர்கள். அதற்கு, நீங்கள் ஒரு நல்ல தொலைநோக்கியைப் பயன்படுத்த வேண்டும். சந்தையில் சில சிறிய வகை தொலைநோக்கிகள் இருக்கின்றன. அதை வாங்கினால் பண்ம்தான் வீணாகும். அதனால், நல்ல தொலைநோக்கியை வாங்கி பாருங்கள்.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

சுதந்திரமாகவும் கட்டற்றும் இருப்பது பற்றி உங்களுக்கு ஒரு கற்பனை இருக்கிறது. நல்லது. தற்போதைய யுரேனஸ் கிரகநிலை உங்களை சொல்லில் இருந்து செயலுக்கு தூண்டுகிறது. பாதுகாப்பு என்பதை நீங்கள் உண்மையிலேயே விரும்பினால், இப்போது நீங்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். நிச்சயமாக பாதுகாப்பு உங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் தேவை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையெனில், பாசாங்கு செய்வதில் அர்த்தமில்லை.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

இன்று உங்கள் சூரிய கட்டத்தில் உள்ள முக்கிய கிரகங்கள், வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய உறவுகள், சட்ட ரீதியான பிரச்னைகள், அறம் சார்ந்த சிக்கல்களைப் பற்றி பேசுகின்றன. உங்களுடைய உரிமைகள் உங்களுக்குத் தெரியும் என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா? உங்களுடைய உண்மையான உரிமைகளை தெரிந்துகொள்ளுங்கள். உங்களால் என்ன செய்ய முடியும் என்ன செய்ய முடியாது என்பது கற்பனை அல்ல.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நீங்கள் மற்றவர்கள் வெளிப்படுத்த சுதந்திரமில்லாத விஷயங்களை வெளிப்படுத்த முயற்சிப்பதில் ஆபத்து உள்ளது. இத்தகைய வாதம் இன்று ஒரு பெரிய பிரச்சினை அல்ல. ஆனால், அந்த ஆபத்து வரும் வாரங்களில் அதிகரிக்கக்கூடும். எனவே, நீங்கள் கவனமாக செல்ல வேண்டும். அவ்வளவுதான்!

கடகம் (ஜூன் 22  – ஜூலை  23)

நீங்கள் திட்டமிட்டபடி இன்னும் உணர்ச்சிபூர்வமான ஆபத்தை சந்திக்காவிட்டாலும், மற்றவர்களை சஸ்பென்ஸ் நிலையில் வைத்திருப்பதற்கு இன்னும் நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. வீட்டில் பிரச்னைகள் ஏற்படுமானால், அதை நீங்கள்தான் ஏற்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

வேலை செய்யும் இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறுகிய சுய நலனைக் காட்டிலும் உயர்ந்த கொள்கைகளை உள்ளடக்கியதாகத் தெரியும். இன்றைய நட்சத்திரங்களில் மிகவும் நேர்மறையான பார்வை என்னவென்றால், உங்களுக்கான குறைகளைத் தீர்ப்பதற்கு இது ஒரு பொருத்தமான தருணம். மேலும், வேலை மாற்றம் சரியானதாக இருக்கலாம்.

கன்னி (ஆகஸ்ட் 24  – செப்டம்பர் 23 )

கடந்த சில மாதங்களாக உங்களுக்குள் இருந்த அனைத்து கொந்தளிப்புகள் மற்றும் குழப்பங்களில் இருந்து ஏதோ ஒரு பெரிய விஷயம் வெளிவரத் தொடங்கும். இன்று உங்கள் நட்சத்திரங்கள் வழக்கத்திற்குமாறான விஷயங்களை சொல்கிறது. நீங்கள் ஒரு காலாவதியான மதிப்புகளைக் கொண்ட அமைப்புகளில் இருந்து உங்களை விடுவிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

இன்றைய கிரக அமைப்பு உங்கள் வீட்டு சூழலிலும் குடும்ப உறவுகளிலும் கணிசமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. ஒரு பெரிய நீண்ட கால நடப்புகளை தெளிவாக்கும். பாரம்பரிய அதிகாரத்தின் உணர்ச்சி பலத்துடன் பிடிக்க வேண்டிய அவசியத்தை உளவியல் பார்வை வெளிப்படுத்துகிறது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

தற்போதைய கிரகங்களின் அமைப்பு உங்களுக்கு மீண்டும் ஒரு உயர்வை அளிப்பதற்கு சிறிது காலம் ஆகலாம். சில விஷயங்களில், உங்களில் பலர் மனித அம்புகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். சந்திரன் இப்போது உங்கள் இலக்கை அடைய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், அது, நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என்பதை சொல்லாமல் செல்கிறது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 20)

இது குழப்பமான நேரமாக இருக்கலாம். அதற்காக, நீங்கள் நினைப்பதை சொல்லாமல் இருக்கக் கூடாது. புதன், நல்ல யோசனைகளின் கிரகம், அது உங்கள் ராசியுடன் வலுவாக இணைந்திருப்பதால் உங்கள் வாதங்களிலும் கருத்துக்களிலும் இதேபோல் சுதந்திரமாக இருக்க முடியும் என்று கூறுகிறது. ஆனால், தயவுசெய்து மற்றவர்களின் உணர்வுகளை கவனியுங்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

நீங்கள் உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். ஆனால், உங்களுடைய செயல் கடினமாகிவிட்டால், நீங்கள் உண்மையிலேயே செய்யக்கூடிய எல்லாம் குழப்பமடைவதோடு, நீங்கள் சமாளிக்க அதிக உணர்ச்சிவசப்பட்ட நபர்கள் இருக்கமாட்டார்கள். மற்றவர்கள் தங்களைக் கவனித்துக் கொள்கிறார்கள், என்பதால், பல நபர்கள் இப்போது சூரிய அஸ்தமனத்திற்குள் செல்ல வேண்டிய மனநிலையில் உள்ளனர். அது ஒரு மோசமான காரியம் இல்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

நீங்கள் ஒரு போட்டி மனநிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். ஆனாலும், பழைய மதிப்புகள் கவர்ச்சிகரமானவை. மேலும், மரபான மகிழ்ச்சிகளைக் கண்டடையும் கும்ப ராசிக்காரர்களின் தந்திரம் அதிகரிக்கப்போகிறது. உண்மையில், முரண்பாடான வழிகளில் நடக்கத் தொடங்குவதற்கு இன்று மோசமான நேரம் அல்ல!

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்கள் மனம் இந்த நேரத்தில் மிக உயர்ந்த தளத்தில் செயல்படுகிறது. அதனால், நீங்கள் மற்றவர்களை விட சிறந்தவர் என்று அர்த்தமல்ல. நீங்கள் கற்பனையில்லாமல் வீணாக இருக்கிறீர்கள் என்பதையும் அது குறிக்கலாம். ஆனால், அது நீங்கள் ஒரு சிறிய புகைச்சலை உணர காரணமாக இருக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasi palan 13th october 2020 rasi palan today

Next Story
Rasi Palan 10th october 2020 : இன்றைய ராசிபலன்Rasi Palan 10th october 2020 : இன்றைய ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com