Rasi Palan 14th August: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 14th August Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 14th August Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 19th August: இன்றைய ராசிபலன்

Rasi Palan 19th August: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 14th August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 14th August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 14, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

Advertisment

சனி கிரகத்தின் ஆதிக்கத்தால் உங்களது யோசனைகளுக்கு மதிப்பு கிடைக்கப்பெறுவீர்கள். யதார்த்தத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றங்கள் மேற்கொள்வீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். புதன் கிரகத்தின் பார்வையால், உங்களது கருத்திற்கு ஆதரவு கிட்டும். இடமாற்றம் குறித்த சிந்தனை மேலோங்கும். சூழ்ச்சி வலையை தகர்த்துஎறிவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நிதிநிலைமை சீராக இருக்கும். செயல்களில் நேர்த்தி மிகுந்திருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

Advertisment
Advertisements

மன சஞ்சலம் அடைவீர்கள். வேகத்தை விட விவேகமே சிறந்தது என்பதை மறந்துவிடவேண்டாம். நிதானம் தவறுவதால், ஒரே செயலை பலமுறை செய்யவேண்டி இருக்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

குடும்ப உறுப்பினர்களுடன் கருத்துவேறுபாடு வந்துபோகும். பிரச்னைக்கு நீங்கள் தான் முடிவு கட்டவேண்டும் என்பதை மறந்துவிடவேண்டாம். மற்றவர்களை குறைசொல்வதன் மூலம் எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காது. செயல்களில் நிதானம் அவசியம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

நிதிநிலைமை கவலையளிக்கும் விதமாகவே இருக்கும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். மனக்கட்டுப்பாடு அவசியம்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

பணவிரயம் ஏற்படும் நாள் என்பதால் சிந்தித்து செயல்படுவது உத்தமம். கோபத்தை தவிர்த்து புன்னகையுடன் இருந்தால், பொன்நகையும் உங்களுக்கு எளிதில் வசமாகும். உணர்ச்சிகளுக்கு இடமளிக்காதீர்கள். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நிதானமே பிரதானம் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். முக்கிய நிகழ்வுகளுக்காக அதிரடி முடிவுகளை மிகுந்த ஆலோசனைக்கு பிறகு எடுப்பீர்கள். எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

வியாபாரத்தில் சிறுசிறு தடங்கல்கள் இருந்தாலும், நிதிநிலைமை சீராக இருக்கும்.நீண்டகால முதலீடுகள் மற்றும் சேமிப்புகளில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். ரிஸ்க் எடுப்பீர்கள். பெரியோர்களின் அறிவுரை தக்க சமயத்தில் உதவும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

சோர்வுடன் காணப்படுவீர்கள், செயல்களில் மந்தநிலை நீடிக்கும். செவ்வாய் உள்ளிட்ட கிரகங்கள் சாதகமாக இல்லாததால், திட்டங்கள் பலனளிக்கவில்லையே என்று வருத்தம் கொள்வீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

இழப்புகள் ஏற்பட்டாலும் அதனை மனதில் ஏற்றாது மகிழ்ச்சியுடன் இருக்க கற்றுக்கொள்வீர்கள். சகோதர உறவுகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம், கவனம். நிதானம் காத்தால் பல பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மகிழ்ச்சியான நாள். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். புறணி பேசுபவர்களை புறந்தள்ளுவீர்கள். எதிலும் வெற்றி காண்பீர்கள்.

Rishabam Rasi Palan Meenam Rasi Palan Kanni Rasi Palan Midhunam Rasi Palan Simmam Rasi Palan Kumbam Rasi Palan Magaram Rasi Palan Dhanusu Rasi Palan Viruchigam Rasi Palan Thulam Rasi Palan Kadagam Rasi Palan Mesham Rasi Palan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: