Advertisment

Rasi Palan 14th December 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan in Tamil 14th December 2019: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 14th December 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 14th December 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 14th December 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 14th December 2019: இன்றைய ராசி பலன், டிசம்பர் 14, 2019

ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க தயங்கமாட்டீர்கள். நிதி விவகாரங்கள் திருப்தி தரும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கசப்பான அனுபவங்களை மறக்க முயற்சிப்பீர்கள். புதிய பாதையில் நடைபோட திட்டம் தீட்டுவீர்கள். ஷாப்பிங்கில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வாகனப்போக்குவரத்தில் நிதானம் கடைபிடிப்பது நல்லது.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சுயதேவைகளை நிறைவேற்றிக்கொண்டு மற்றவர்களுக்கும் இயன்ற உதவிகளை செய்வீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

எதிர்கால வாழ்க்கைக்காக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடந்தகால தவறுகளிலிருந்து பாடம் கற்பீர்கள். மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் வார்த்தைகளில் நிதானம் கடைபிடிப்பது நல்லது. மற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

பயண திட்டங்களை இன்று துவங்காமல் இருப்பது நல்லது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயணம் மேற்கொள்வதனால், விரயங்களை தவிர்க்கலாம். நண்பர்கள், உறவினர்கள் பக்கபலமாக இருப்பர்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

நினைப்பது ஒன்று நடப்பது வேறொன்றாக உள்ளதே என்று வருத்தப்படுவீர்கள். வெளிவட்டார தொடர்பினால் ஆதாயம் கிடைக்கும். நீண்டகால திட்டங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கிரகங்களின் பார்வை சாதகமற்ற நிலையில் இருப்பதால் மனசஞ்சலம் அதிகரிக்கும். மற்றவர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் கடைபிடிப்பது நல்லது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

தலை என்ற ஒன்று இருந்தால் தலைவலி என்ற ஒன்றும் இருக்கும் என்பதை எத்தருணத்திலும் மறக்க இயலாது. மனிதராய் பிறந்த அனைவருக்கும் இது பொதுவானது என்பதை உணர்வீர்கள். மற்றவர்களை முதல் பார்வையிலேயே நம்புவது ஆபத்தானது என்பதை எத்தருணத்திலும் மறக்க மாட்டீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு தோன்றும். தொழில்முறை விவகாரங்களில் அதிக முதலீடு மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். ஒவ்வொரு படியையும் கவனமுடன் எடுத்து வைப்பது நல்லது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மற்றவர்களின் உயர்வுக்கு ஏற்ற உதவிகளை செய்வீர்கள். மற்றவர்கள் ஆதரவு தாராளமாக கிடைக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

கடந்த காலங்களில் ஏற்பட்ட அவமானங்கள், துரோகங்களால் தான் இத்தகைய நிலையை நாம் அடைந்துள்ளோம் என்பதை உணர்வீர்கள். அனுபவ முதிர்ச்சி மற்றும் அறிவே சிறந்த ஆயுதங்களாக உணர்வீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மனசஞ்சலத்துடன் இருப்பதால், செய்யும் காரியங்களில் முழு ஈடுபாடு செலுத்த இயலாமல் தவிப்பீர்கள். மாற்றங்களை எதிர்கொள்ள தயாராவீர்கள்.

குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...

பிரபலங்கள், ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ரஜினிகாந்த்!

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment