மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
கடந்த வருடங்களில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் எல்லாம் இன்ற வருடம் சரியாகிவிடும். மற்ற கோள்கள் அனைத்தும் உங்களுக்கு உதவி புரிவதால் இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். ஒவ்வொரு கடினமான சூழ்நிலையும் உங்களை வலுப்படுத்துகிறது என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். எப்போதும் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதை நீங்கள் இன்று நன்கு உணருவீர்கள். தொழிலில் புதிதாக எதையாவது செய்ய முயற்சி செய்தாலும் அவை இன்று தோல்வியில் முடியும். உங்களின் பணத் தேவை இன்று அதிகரிக்கும் ஆனாலும் நினைத்தது போல் செலவு செய்ய முடியாது சங்கடமான சூழல் உருவாகும். பணத்தை சிக்கனப்படுத்த வேண்டிய நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
கணக்கு வழக்குகளை முடித்து வைக்க வேண்டிய நாள் இன்று. வெளியாட்களிடம் வாங்கிய கடன் எதாவது இருந்தால் அதை இன்று அடைத்துவிட முயற்சி செய்யுங்கள். முடிந்த அளவுக்கு கடன்களை அடைப்பதில் கவனம் செலுத்துங்கள் இல்லையென்றால் பின் வரும் நாட்களில் அதுவே பெரிய பிரச்சனையாக மாற அதிக வாய்ப்புள்ளது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உங்கள் வாழ்க்கை துணையோடு சில மன சஞ்சலங்கள் வந்து நீங்கும். திடீரென உங்களை அதிகமாக வெறுப்பேற்றுவார்கள். ஆனால் அது ஒன்றும் புதிதல்ல என்று உங்களுக்கே தெரியும். ஒரு சிலர் உங்கள் துணைக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அதற்குள் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் பிறகு என்ன செய்யலாம் என்று முடிவெடுங்கள். ஆனால் அதற்கு முன்பு அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
இன்றைய தினம் பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதன் காரணத்தால், அலுவலகத்தை பார்ப்பதா, குடும்பத்தை கவனிப்பதா என்று குழப்பம் ஏற்படும். வாழ்க்கை அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று அதிகமாக யோசிப்பீர்கள். ஆனால் எதை செய்தாலும் திங்கள் கிழமைக்கு பிறகு செய்யவும். அது வரை பொறுமையுடன் காத்திருப்பது அவசியம்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். எந்த காரியத்தை தொட்டாலும் துளங்கும். இவ்வளவு செய்து வந்த வேலையில் இருந்து சிறிது இடைவேளை இன்று எடுத்துக் கொள்ளலாம். கலை திறன் உள்ளவர்கள் இன்று திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. இன்று எதையோ இழந்தது போல உணர்வீர்கள். இது வெறும் உணர்வு மட்டுமே. உங்களிடம் இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். இன்று பணியிடத்தில் அதிக வளர்ச்சி காண முடியாது.முறையாக திட்டமிடாததே இதற்கு காரணம். இதனால் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
இன்று அதிக பதட்டம் காணப்படும். தியானம் அல்லது யோகா செய்வதன் மூலம் இந்தச் சூழ்நிலையை நீங்கள் சமாளிக்கலாம். கவனக்குறைவு காரணமாக இன்று பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. அதனை நீங்கள் தவிர்த்தல் வேண்டும். உங்கள் துணையுடன் அகந்தை உணர்வு காரணமாக பிரச்சினை ஏற்படும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
சிறிய பண வரவு கூட உங்களின் நம்பிக்கைக்கு பெரிய அளவு ஊக்கமளிக்கும். மிகவும் நுண்ணுணர்வுடன் செயல்படுவீர்கள். உங்களின் மனநிலையை சீராக வைத்துக் கொள்ள அதிகம் முயல்வீர்கள். உங்களுக்கான சூழ்நிலை சரியாக அமையாது போது மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தாதீர்கள். பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
மற்ற நாட்களை விட மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருப்பீர்கள். உங்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் காணப்படும். எதையும் அமோதிக்கும் நிலைக்கு ஆளாவீர்கள். பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுவது நல்லது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். அது போல உங்களுக்கும் ஒரு கதையும் அந்த கதைக்கான காரணமும் இருக்கும். உங்கள் உறவுகளை அணுசரித்து செல்ல வேண்டிய நாள் இன்று. மற்றவர்கள் நிலையில் இருந்து அவர்களின் நிலைமையை புரிந்து செயல்பட வேண்டியது அவசியம். இன்று கிடைக்க வேண்டிய பணம் உங்களுக்கு தாமதமாகவே கிடைக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் சிறிது வெற்றி காணலாம். உங்கள் மேலதிகாரிகளுடன் மோதல்கள் காணப்படும். உங்களின் திறமை காரணமாக அவர்களை மிஞ்சி விடுவீர்கள் என்று நினைப்பதால் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. புரிந்துணர்வின்மை காரணமாக உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படும்.