Advertisment

Rasi Palan 14th May: இன்றைய ராசிபலன், திருமணம் விரைவில் நடைபெற வாய்ப்பு!

Rasi Palan Today, 14th May Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 14th May: இன்றைய ராசிபலன்

Rasi Palan 14th May: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 14th May 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 14th May 2019 : இன்றைய ராசி பலன், மே 14, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

எதிர்காலத்தை மிகச் சரியாக கணிக்க வேண்டிய நேரமிது. அதற்கான திட்டமிடலை இப்போதே தொடங்க வேண்டும். ஏனெனில், எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியதில் இன்று தடுமாறுவீர்கள். உங்கள் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் இலக்கை நோக்கி தெளிவாக முன்னேறுவீர்கள். வெற்றிக்கான அனைத்து சூத்திரத்தையும் கண்டறிந்து நீங்கள் முன்னேற வேண்டும். மந்தமான நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நீங்கள் எதிர்பார்த்தது நடந்திருப்பதற்கு நிச்சயம் கிரக நிலைகளுக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். திருமணம் விரைவில் நடைபெற வாய்ப்புள்ளது. சில தேவையில்லாத சங்கடங்களை இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டாம். கணிசமான நல்ல செய்திகளை உங்கள் காது இன்று கேட்கும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்கள் காதலுக்கு விரைவில் கிரீன் சிக்னல் கிடைக்கும். எந்த விஷயமாக இருந்தாலும், போராடினால் உங்களுக்கான வெற்றி உறுதி. ஆனால், அதை தள்ளிப்போடாமல் செய்வதில் தான் உங்கள் வெற்றி அடங்கியிருக்கிறது. உங்கள் அடுத்த இலக்கை நோக்கி அடுத்த அடி எடுத்து வைப்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

பையில் இருந்து ஒரு நயா பைசா கூட எடுக்க மாட்டீர்கள். ஆனால், உங்களை நோக்கி செல்வம் மீண்டும் வந்து சேரும் தினம் இன்று. உங்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இது நேரமில்லை. களத்தில் இறங்கி நிவர்த்தி செய்தே தீர வேண்டும். இவ்வளவு நாட்களாக உங்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் பின்வாங்க வாய்ப்புள்ளது.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உங்கள் திட்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டதே என்று கவலைப்பட வேண்டாம். உங்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் நிரூபித்து மீண்டு வருவீர்கள். தோற்றாலும், ஜெயித்தாலும் மீசையை தாராளமாக முறுக்கலாம். கண்டிப்பாக மொக்கை வாங்க மாட்டீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

இவ்வளவு நாட்களாக உங்களுக்கு கைக்கொடுத்த வந்த சூட்சமங்கள் இனி உங்களுக்கு உதவப் போவதில்லை. காலை வாரிவிடும். ஆகையால், எதிர்கால பணத்தேவைக்கும் சரி, நிதி நிலைமைக்கும் சரி, நீண்ட கால திட்டம் தான் ஒத்துப் போகும். ஆகவே, கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

வெற்றிக்காக உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துவீர்கள். ஆசாபாசங்களை கட்டுப்படுத்துவீர்கள். உங்கள் குடும்பம் பக்கபலமாக இருக்கும். உடல் நலத்தில் கவனமின்றி செயல்படுவதே உங்கள் மைனஸ் எனலாம். நிம்மதியான நாள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

இன்று நீங்கள் உங்கள் உண்மையான ஆற்றலை அறிந்து கொள்வீர்கள். உங்களின் தகவல் தொடர்பு திறமைக்கான பாராட்டு பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களின் நம்பிக்கையான மனநிலை காரணமாக நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்களுக்கு தேவையான ஒன்று, தேவையான நேரத்தில் கிடைக்கும். சில சமயம் அது கிடைக்காமல் கூட போகலாம். நிலைமை உங்கள் கையைவிட்டு போனாலும், நீங்கள் அதை நிதானமாக கையாள வேண்டும். அறிவார்ந்த முறையில் பணி செய்தால் மட்டுமே வெற்றி காண இயலும். அதன் மூலம் நீங்கள் உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய நாள் இது. செலவு, குடும்பம், வேலை என அனைத்திலும் பொறுப்பாக இருக்க வேண்டிய நேரம் இது. வாழ்க்கையை எளிதாக கடந்து செல்ல எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதும் அவசியம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்கள் செயல்களை சுமூகமாக மேற்கொள்ள நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் நம்பிக்கை இழக்க நேரலாம். நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சமூகம் சார்ந்த பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்பு ஏற்படும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment