Rasi Palan Today 14th November 2018 in Tamil : வாழ்வில் நமது ஒவ்வொரு செயலுக்கும் பின் விளைவுகள் உண்டு. நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகள், தீய செயல்களுக்கு தீய விளைவுகள். இதுவே சத்தியம். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் வழங்கும் ராசி பலன்களை இங்கே காணலாம். வாசகர்களுக்காக தினமும் ராசி பலன் பகுதியை வழங்கி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
Rasi Palan 14th November 2018 : இன்றைய ராசி பலன், 14 நவம்பர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளன. பல நாள் கனவுகள் நனவாக வாய்ப்புள்ளது. உங்களது உணர்வுகளை வெளிக்காட்டும் நாள் இது. பணியிடத்தில் உங்களை முதன் முறையாக இன்று பலரும் ஆச்சர்யமாக பார்ப்பார்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
நிதி நிலைமையில் ஆச்சர்யமான முன்னேற்றம் உங்களுக்கு ஏற்படும். அதேகேற்ப செலவுகள் இருந்தாலும், பணம் தங்கும். வீட்டில் அழுக்குகள் இருந்தால் உடனே சுத்தம் செயுங்கள். அது நன்மை பயக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
எல்லாம் உங்கள் வழிப்படி சுமூகமாக செல்லும். மெதுவாக நடந்தாலும், இறுதியில் நிதானமான வெற்றி கிடைக்கும். அது உங்களுக்கு மன நிறைவை கொடுக்கும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
மிகவும் பிஸியாக இருப்பீர்கள். நிதி நிலைமையில் சற்று நஷ்டம் ஏற்படும். இருக்கும் பொருளையே வேறு வடிவத்தில் வாங்கி, செலவு செய்வீர்கள். கடினமான தருணங்களையும் வெல்வீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
தூக்கமில்லாத இரவுகளை சந்திக்க நேரிடும். அதை நீங்கள் வெல்ல முயற்சித்தாலும், திட்டம் தோற்றே போகும். உங்கள் துணை உங்களை குழப்பத்திலேயே வைத்திருப்பார்கள். அனுகூலம் இல்லாத நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உங்களுக்கு ஆர்வமில்லாத ஒப்பந்தங்களுக்கு ஏன் நீங்கள் அனுமதி அளித்தீர்கள் என்று உங்களுக்கே புரியாது. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு, அவர்களது அன்பை சம்பாதிக்க வேண்டிய நேரம் இது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
உங்கள் துணை என்ன சொல்கிறார்கள் என்பதை காது கொடுத்து முதலில் கேளுங்கள். அவர்களது ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்வது நன்று. சில சமயம் அவர்களுக்கு நீங்கள் மதிப்பளித்தே இல்லை. நிதி தொடர்பான திட்டங்களை முறையாக செயல்படுத்துவீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
வீட்டிலிருந்தோ, அலுவலகத்தில் இருந்தோ உங்களுக்கு நிறைய சவால்கள் இன்று ஏற்படும். அதனை வென்று வரும் தன்னம்பிக்கை உங்களிடம் உள்ளது. எதிர் கேள்விகள் மூலம், உங்கள் திறமையை உணர்த்துவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
உங்கள் வீட்டை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள அடுத்தடுத்த முயற்சியை மேற்கொள்வீர்கள். இன்று வெற்றிகரமான நாள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
அதிர்ச்சிகளும், கடினமான சூழ்நிலைகளும் உங்களை கடுமையான சோதனைக்கு உள்ளாக்கும். ஆனால், உங்கள் கைகளில் தான் வெற்றி உள்ளது என்பது திண்ணமாக நம்புவீர்கள். வெற்றி நிச்சயம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
சுய கட்டுப்பாடு என்பது மிக மிக அவசியம். உங்கள் சுதந்திரம் எங்கும் பறிபோய்விடாது. அதை யாரும் பறித்துச் சென்று விடமாட்டார்கள். ஆகையால், வீண் பேச்சுகளை தவிர்த்து காரியத்தில் கண்ணாய் இருங்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
இன்று உங்களுக்கு அமானுஷ்யமான நாள் போன்று தோன்றும். பயப்பட வேண்டாம். அப்படியொரு ஆச்சர்யங்கள் கலந்த நிகழ்வுகள் அரங்கேறும். ஆனால், அது உங்களை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கும். நிதி நிலைமை கட்டுக்குள் இருக்கும்.