Rasi Palan 14th october 2020 : இன்றைய ராசிபலன்

rasi palan 14th October 2020 rasi palan today – இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan October 14, இன்றைய ராசிபலன், அக்டோபர் 14 ராசிபலன்

Today Rasi Palan, 14th october 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 14th October 2020: இன்றைய ராசி பலன், அக்டோபர் 14, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

தொலைநோக்கியை பற்றி சில தகவல்கள். நீங்கள் ஒரு தொலைநோக்கியை வாங்கினால், அதனுடைய குறைந்தபட்ச அளவு ‘நான்கு அங்குலமாக’ இருக்க வேண்டும். அந்த அளவு அதனுடைய நீளம் அல்லம். அதனுடைய கண்ணாடிகள் மற்றும் உருப்பெருக்க கருவியின் திறனைக் குறிக்கும். அத்தகைய ஒரு தொலைநோக்கி கருவியைக் கொண்டு நீங்கள் சனி கிரகத்தின் வளைவுகளையும் வியாழனின் நிலவுகளையும் காண முடியும். அதனால், உங்கள் வாழ்க்கை மீண்டும் அப்படியே இருக்காது.

மேஷம் (மார்ச் 21- ஏப்ரல் 20)

உங்களுக்கு இன்று ஒரு முதலாளியுடன் அல்லது அதிகாரத்தில் உள்ள ஒருவருடன் மோதல் அல்லது எதிர்ப்பு ஏற்படுவது பெரும்பாலும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அது விரும்பக்கூடியதாகவும் இருக்கலாம். இதன் விளைவாக உங்களுடைய முன்னேற்றம் சாத்தியப்படும். இதில், நீங்கள் எதிர்ப்பை பெற்றால் அடுத்த முறை எவ்வாறு சிறப்பாகச் செயல்படுவது என்று யோசித்து வேலை செய்யுங்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

இன்று உங்கள் ராசிக்கு நன்மை பயக்கும் சந்திரன் சிறப்பு வாய்ந்தது. ஆனால், ஒவ்வொரு விஷயத்திலும் நல்லொழுக்கம் உள்ளவராக இருக்க வேண்டிய கடமையை அது உங்களுக்கு வழங்குகிறது. நீங்கள் உங்களுடைய தரத்தை இறக்கிக்கொள்ள அனுமதிக்காதிர்கள். அப்படி செய்தால் நீங்கள் முதலில் அந்த நன்மைகளை இழக்க நேரிடும். குறைந்தபட்சம் உங்களை நீங்களே புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் வரை மற்றவர்களை மிகவும் கடுமையாக விமர்சிக்காதீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்களுக்கு பெரும்பாலும் இன்று நிதி சம்பந்தமான சண்டையின் விளைவுகளையே சார்ந்திருக்கும். உங்களுக்கு நிச்சயமாக, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியும் வருங்காலத்தைப் பற்றியும் கவலை இல்லை என்றால் நீங்கள் உங்களால் முடிந்தவரை ஆடம்பரமாக இருக்கலாம். நீங்கள் உங்களுடைய சூழ்நிலைகளை உண்மையிலேயே கவனித்து, எது சிறந்தது என்பதை தீர்மானிக்க வேண்டும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

நீங்கள் ஒரு உணர்ச்சி பூர்வமான பிணைப்பை முறிக்கும் சூழ்நிலையை சந்திக்க உள்ளீர்கள். அத்தகைய முறியும் தொடர்புகளை முற்றிலும் மக்களுடன் அல்லாமல் இடங்களுடனோ அல்லது நிறுவனங்களுடனோகூட இருக்கலாம். கடந்த காலத்தை விடுவதற்கான உங்களுடைய தயக்கம்தான் முக்கிய பிரச்னை. அநேகமாக, உங்களுடைய நினைவுகளுக்கு விடையளிக்கும் நேரம் இதுவாக இருக்கலாம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உங்கள் பணத்தை உங்களுடைய கடினமான சூழலில் செலவிட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் சமமாக வருவதற்கு மற்றவர்களுக்கு போதிய அக்கறை இருக்கும்போது மட்டுமே, ஒரு குறிப்பிட்ட திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். மேலும், நீங்கள் உங்களுடைய தேளிவான இலக்குகளை உறுதி செய்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

சரியாகவோ அல்லது தவறாகவோ, நீங்கள் மிகவும் திறமையானவராக புகழ் பெற்றிருக்கிறீர்கள். ஆனால், இப்போது நீங்கள் எந்தவொரு சூழ்நிலையையும் உங்களுடைய நன்மைக்காக மாற்ற முடியும் என்று சொல்வது சற்று உங்களைப் புகழ்வதாகக்கூட இருக்கலாம்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்களுடைய சமீபத்திய கடந்த காலம் வேகமான கோபங்கள் மற்றும் பதட்டமான சூழ்நிலைகளால் வண்ணமயமானதாகத் இருந்திருக்கிறது. அதனை மற்றவர்கள் கவனிக்கத் தவறியிருக்கலாம். நீங்கள் அடுத்த நான்கு வாரங்களுக்கு முடிந்தவரை முன்னெறுவதற்கு ஒவ்வொரு சிறிய வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நீங்களே எல்லாவற்றையும் செய்ய வேண்டியதில்லை. உங்கள் சார்பாக மற்றவர்களை முன்னேற அனுமதிக்கலாம். இருப்பினும், நீங்கள் அவர்களின் நலன்களுக்கு எதிராக செல்ல அவர்களை வற்புறுத்த எந்த வகையிலும் முயற்சிக்கக்கூடாது. மற்றவர்கள் தியாகம் செய்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்ப்பது இல்லை.

தனுசு (நவம்பர் 23 – ஜனவரி 20)

சில நிதி அல்லது வணிக விஷயங்கள் மிகவும் தொந்தரவாகும். நண்பர்கள் கவனக்குறைவாக உங்கள் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம். குறி மிக அதிகமாகத் தெரிந்தால் பின்வாங்க இன்னும் நேரம் இருக்கலாம்.

மகரம் (டிசம்பர் 23 0 ஜனவரி 20)

நீங்கள் பணி தொடர்பாக இன்னும் சில வேலைகளை முடிக்கவிலை. உங்களுக்கு மற்றவர்கள் வழங்குவதாக உறுதியளிக்கும் அனைத்தையும் கொண்டு வருவார்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள். இருப்பினும், நீங்கள் மற்றவர்கள் தங்கள் கடமைகளை விட்டுச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒரு சிறிய கருணையும் பாரட்டப்படும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்களுக்கு வெளிப்படையாக நன்கு தெரிந்த நபர்களால் முகத்துக்கு நேராக சொல்லப்படுபவைகளுக்கு மிகையாக எதிர்வினையாற்றாதீர்கள். இது அவர்கள் பேசுவதில்லை. அவை பழைய உணர்ச்சிபூர்வமான சந்திரன் காதல் கொந்தளிப்பு பற்றிய எச்சரிக்கைகளை அனுப்புகிறது. இதை மற்றவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை நீங்கள் உணரும் வரை அதை தவிர்க்கக்கூடிய நடவடிக்கையை எடுக்கலாம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

விடுதலை மற்றும் சுதந்திரத்தின் கிரகமான வியாழன் சம்பந்தப்பட்ட வலுவான கிரக அமைப்புகள், நீங்கள் எல்லாவற்றுக்குப் பிறகு, ஒரு நீண்ட கால உணர்ச்சிப்பூர்வமான சங்கடத்திலிருந்து வெளியே வெளியே செல்வதற்கான வழி இருக்கிறது என்று சொல்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அதற்கு உங்கள் மனதை தயாராக்குவதுதான். பின்னர், நீங்கள் உங்கள் விருப்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasi palan 14th october 2020 rasi palan today

Next Story
Rasi Palan 13th october 2020 : இன்றைய ராசிபலன்Today rasi palan, rasi palan December , இன்றைய ராசிபலன், ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com