சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
மற்றவர்களை நம்பாமல் உங்களை நம்ப வேண்டிய நேரமிது. உங்கள் தொழில் பார்ட்னர்கள் கூட உங்களுக்கு உதவுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. உங்கள் கைகளே உங்களுக்கு உதவி.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
இன்றைய நாள் உங்களுக்கு மிக எளிதாக அமையும். வழக்கத்தைவிட அது மிருதுவானதாக இருக்கும். மற்றவர்களின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும், வாழ்த்துகளையும் நீங்கள் எந்த அளவிற்கு எடுத்துக் கொள்கிறீர்களோ அந்தளவிற்கு நீங்கள் முதிர்ச்சியடைவீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கடன் வாங்கும் பழக்கத்தை கை விடவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உடன்பிறப்பு வகையில் பண விரயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் தவறான சேர்க்கையை தவிர்க்கவும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
பயணங்களின் போது உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவு உண்டு. விலை உயர்ந்த பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் நல்ல பல சலுகைகள் கிடைக்கும். மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம் இது.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
குடும்ப வேலையை அக்கறையுடன் செய்வீர்கள். உடல் உழைப்பு காரணமாக மனச்சோர்வு ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய பயணங்கள் ஏற்படும். பண விரயம் ஏற்படும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. முக்கிய தருணத்தில் பெற்றோரின் அறிவுரையை எடுத்துக்கொள்ளவும். நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கியே இருக்கும். சரியான திசையில் செல்வீர்கள். மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்பீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். செலவுகளை சரியாக திட்டமிட்டு செலவிட வேண்டியது அவசியம்.