Today Rasi Palan, 15th August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 15th August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 15, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
விழிப்புடன் இருப்பது நல்லது. அண்டை அயலாரை அனுசரித்து செல்வது நல்லது. கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வீண்விவாதம் வேண்டாம். நிதானமான சிந்தித்து முடிவுகளை எடுப்பது நல்லது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
நட்புக்கு மரியாதை அளிப்பீர்கள். நண்பர்களால் பலன் அடையும் நாள். மனதில் நற்சிந்தனைகள் ஏற்படும். நல்லநேரம் நீண்டநேரம் நீடிக்காது என்பதை எப்போதும் மறந்துவிடக்கூடாது.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
அசதியாக இருப்பதாக உணர்வீர்கள். புத்துணர்வு பெற வார இறுதி நாட்களில் நீண்டதொலைவு பிரயாணத்திற்கு திட்டமிடுவீர்கள். வழக்கமான பணிகளிலிருந்து விலகிச்செல்வீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
பாதகமான சந்தர்ப்பங்களால் மனக்குழப்பம் அடைவீர்கள்.சவால்களை எதிர்கொள்ள துணிவீர்கள். கடின உழைப்பே வெற்றி தரும் என்பதை உணர்வீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
நிதானம் காப்பது நல்லது. மன அழுத்தத்தால் அல்லல்படுவீர்கள். கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் மனசஞ்சலம் ஏற்படும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
மற்றவர்களின் செயல்பாடுகள் நிதானம் இழப்பீர்கள். உங்கள் பிரச்னைகளுக்கான தீர்வு, உங்களுக்குள் இருக்கிறது என்பதை உணர்வீர்கள். நடப்பு நிலையை உணர்ந்து அதற்கேற்ப முடிவுகளை எடுப்பீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
ஏக்கம் மற்றும் துயரம் மனதை ஆட்கொள்ளும் நிலை இருப்பதால் கவனம் அவசியம். கடந்த கால நினைவுகள், சற்று ஆறுதலை தரும். இந்த நினைவுகளின் மகிழ்ச்சியுடனேயே இந்த மாதத்தை கடப்பீர்கள். பழைய கால நினைவுகளை அசைபோடுவீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். துரோகிகளிடமிருந்து விலகுவீர்கள். மனசஞ்சலத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலிருந்து விடுபட விரும்புவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
திட்டமிட்ட காரியங்கள் இனிதே ஈடேறும். பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் உறுதியாக இருப்பீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
நிதிநிலைமை சீராக இருப்பதால் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். சிறிய இழப்புகளை பொருட்படுத்தமாட்டீர்கள். தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
புயல் அடித்து ஓய்ந்தபின் ஏற்படும் அமைதியை போல, மனம் அமைதி பெறும். சுயமாக சிந்தித்து செயல்படுவீர்கள். கற்ற புதிய உத்திகளை செயல்படுத்த முனைவீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
தேவைகள் பூர்த்தியாகும் நாள். உணவு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கேற்ப உங்களின் செயல்பாடுகள் அமையும்.