Today rasi palan, rasi palan july 17th, இன்றைய ராசிபலன்
Today Rasi Palan, 15th February 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 15th February 2020: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 15, 2020
இன்றைய நாள்
Advertisment
Advertisements
ஒவ்வொரு அசைவுக்கும் பின்னால் ஒரு இயக்கம் காரணமாகிறது. ஒரு மூலக்கூறு காரணமாகிறது. காரண காரியமின்றி இங்கு எதுவும் அசைவதில்லை.
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
தனிமையில் அதிகம் நேரம் செலவிட முயற்சி செய்யாதீர்கள். மனக்கட்டுப்பாடு இப்போது உங்களிடம் இல்லை. கல்வியில் இன்னும் அதிக முயற்சி எடுக்க வேண்டும். உங்களது முயற்சிகள் சில தோல்வியில் முடிய வாய்ப்புள்ளது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
உங்கள் இலக்குகளை அடைய இந்த நாள் அனுகூலமாக இருக்காது. அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உங்களை வைத்திருப்பது நல்லது. இன்று திறமையாக செயலாற்ற அனுசரணையான அணுகுமுறை தேவை. நிதிநிலைமை அபாரமாக இருக்கும். கூடுதல் செலவுகள் காணப்படும். இது உங்களுக்கு அதிருப்தி அளிக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
கடவுள் வழிபாடும் அவசியம். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். நீண்ட கால ரகசியங்கள் வெளிப்படும். குறுகிய மனப்பான்மை கொண்ட நபர்களை சந்திக்க நேரிடும். சுமாரான நாளாக இருக்கும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
காது தொடர்பான மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோர்களின் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். மேம்போக்கான சிந்தனைகளை மாற்றிக் கொண்டால் உங்களுக்கு நல்லது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
அனுபவமே உங்களுக்கு பாடம். அதை நியாயமாக கற்றுக் கொள்ள விரும்புவீர்கள். சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் ரியாக்ட் செய்ய வேண்டாம். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உங்கள் கால் பூமியில் படும்படி நடந்து கொண்டால் நல்லது. கோவிலுக்கு சென்றால், பூசாரியின் கால்களில் விழுந்து வணங்குங்கள், அது உங்கள் பூர்வ கர்மாவை கழிக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
துணிச்சலாக அனைத்து விஷயங்களையும் எதிர்கொண்டு வரும் நீங்கள், உங்கள் சொந்த விஷயத்தில் கோட்டை விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை பணிய வைப்பார்கள். மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
கடன் தொல்லைகள் நீங்கும். உண்மையுடன், நேர்மையாக செயல்படுவீர்கள். பணியிடத்தல் செல்வாக்குடன் வலம் வருவீர்கள். அதில் சில இம்சைகளும் உங்களை வலம் வரும். வெற்றிகரமான நாள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
குடும்ப உறவில் மகிழ்ச்சி நீடிக்கும். இதனால், நீண்ட காலம் மனதில் இருந்த ரணம் குறையும். சில ஆச்சர்யமான அதிர்ச்சிகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. அதற்காக அதிகளவு கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. அது உங்களை பேராபத்தில் கொண்டு போய் நிறுத்தும். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டிய நாள் இது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
புதிய வாழ்க்கைக்கான நல்ல அடித்தளம் போடுவீர்கள். மகிழ்ச்சியான நாள். முன்பு உங்களை உதாசீனம்படுத்தியவர்கள் இப்போது உங்களை ஆராதிப்பார்கள். அதனை நம்ப வேண்டாம். உண்மை எது, பொய் எது என்பதை பிரித்து பழக முயற்சி செய்யுங்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
துன்பங்கள் எப்போதும் நிலைப்பெற்று இருக்காது. அது தற்காலிகம் தான் என்ற உண்மையில் விரைவில் உணருவீர்கள். கொஞ்சம் காத்திருங்கள், எல்லாம் நன்மைக்கே.