Today rasi palan, rasi palan june 15th, இன்றைய ராசிபலன்
Today Rasi Palan, 15th January 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 15th January 2020: இன்றைய ராசி பலன், ஜனவரி 15, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
போலி கவர்ச்சிகளை நம்பி ஏமாற வேண்டாம். ஏதோ விளம்பரம் போல சொல்ல வைத்துவிட்டீர்களே!! உங்கள் கிரக நிலைகள் அப்படி. இன்று வெளுத்ததெல்லாம் பால் என்று என்ன வைக்கும். கவனமாக இருக்கவும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
நண்பர்களுக்காக உங்களுடையே நிம்மதிகளை ஏன் இழக்கணும்? ஏன் நீங்களாகவே எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க வேண்டும்? கலைத்திறன் மிகுதியாய் இன்று வெளிப்படும். சினிமாத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று ஒரு அருமையான நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
கஷ்டப்பட்டு உழைத்தும் பெயர் கிடைக்கவில்லையே என்ற சோகம் வேண்டாம். இது எல்லோருக்கும் நிகழும் சம்பவமே. அதற்காக உடைந்து போக தேவையில்லை. குடும்பத்தில் நிலவிய இறுக்கம் சற்று குறையும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
பிள்ளைகள் உங்கள் மீது அதிக அன்பு செலுத்துவார்கள். பணியிடத்தில் முன்னேற்றம் இருக்கும். குறிப்பாக, பணவரவு அதிகமாகும். பொருளாதாரத்தில் மேம்பட்டு வருவீர்கள். உங்கள் சொந்தங்களில் உங்களை ஏளனமாக நினைத்தவர்களே உங்கள் ஆராதிப்பார்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
பிடித்த விஷயங்களை தேடித் தேடி அனுபவிப்பீர்கள். கண்டதும் காதல் என்பது உங்களுக்கு செட்டாகாது பார்த்துக்கோங்க. நிதி நிலைமை கொஞ்சம் முன்னேற்றம் அடையும். கடன் தொலை கழுத்தை நெரிக்கிறது, இருப்பினும் எச்சரிக்கை தேவை.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உடல்நலனில் அக்கறை வேண்டும். வீட்டுக்கு அருகில் உள்ள ஏதாவதொரு கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. உணவில் கட்டுப்பாடு தேவை. கவனமாக இருக்க வேண்டிய நாள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
விலாவாரியாக எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருக்காமல், உங்கள் பணியை மட்டும் கவனியுங்கள். அரசுப் பணிகளுக்கு தயார் ஆகுபவர்கள், இன்று மறக்காமல் சிறிது நேரமாவது படித்தால் நல்லது. வெற்றி வந்து சேரும் நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
நண்பர்களின் ஆலோசனைக் கேட்டு நடக்க வேண்டும். திட்டம் போட்டு செலவுகளை சமாளியுங்கள். ஆடம்பரத்தை சற்று ஒதுக்கி வையுங்கள். எண்ணெய் சார்ந்த பலகாரங்களை இன்று ஒதுக்கினால் நல்லது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
பொய் சொல்வதை தவிர்க்கவும். கிரகங்கள் உங்களுக்கு எதிராக இருப்பதால், சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. வாயுப் பிரச்சனை அதிகமாகும். அமைதியை கடைபிடியுங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
வெளிநாடு வாய்ப்பு தொடர்ந்து நீடிக்கிறது. காதலில் நல்ல பதிலை எதிர்பார்க்கலாம். வெற்றி எனும் தேவதை இன்று உங்களுடன் இருக்க விரும்புகிறாள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
செலவு கையைச் சுடும். உங்கள் திறமையான நிர்வாகத்தால் அதனை சமாளிப்பீர்கள். முப்பாட்டன் முருகனை மனதில் நினைத்து காரியங்களில் ஈடுபடுங்கள். வெற்றி நிச்சயம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
கல்யாண பேச்சு தொடங்கும். பரவயில்லையே என்ற தருணங்கள் உங்களை சூழும். அதை ரசிப்பீர்கள். தொடக்கம் என்று ஒன்று இருந்தால், முடிவு என்று ஒன்று இருக்கும் தானே.