மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
உங்கள் வெற்றியை நோக்கி ஓட வேண்டிய நாள். குரைத்துக் கொண்டிருப்பவர்களை திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள். களம் புதிதாக இருந்தாலும் தைரியமாக செயல்படுங்கள். வெற்றி உறுதி. குடும்ப உறவில் மேலும் அக்கறை வேண்டும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
அருகில் இருப்பவர்களை முற்றிலுமாக நம்ப வேண்டாம். பணம் கொடுக்கல், வாங்கலில் மனஸ்தாபம் ஏற்படும். பழைய பிரச்சனைகளை தோண்டி எடுத்து, உங்களுடன் மல்லுக்கட்ட சிலர் வருவார்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்கள் பணியை செய்ய விடாமல் தடுக்கும் சூழல் உருவாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மனைவியின் அன்பான வார்த்தைகள் உங்களை உற்சாகப்படுத்தும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உடல்நலத்தில் அக்கறை தேவை. உடல் சார்ந்த உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விநாயகரை இன்று வழிபடுங்கள். மென்பொருள் தொடர்பான பணி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
உடலை ஒருமுறை முழுவதும் பரிசோதனை செய்துவிடுங்கள். சில மருத்துவ செலவுகள் ஏற்படும் முன்னரே, அதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறியளவு பிரச்சனை வந்து போகும். சுமாரான நாள் உங்களுக்கு.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
கிரக அமைப்பு நிலைப்படி, இன்று தானம் வழங்குங்கள். உங்களின் ஆரோக்யமும், நிதி நிலைமையும் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
புரமோஷனுக்கு வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளுடன் நல்ல பெயரை பெறுவீர்கள். யாரையும் புண்படுத்த தெரியாத உங்களுக்கு வெற்றி தேடி வரும். இன்பமான நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
சிலரை புரிந்து கொள்வது மிகக் கடினம். இன்றைய நாள் உங்களுக்கு அப்படியானதாக இருக்கப் போகிறது. எங்கிருந்து பிரச்சனை வருகிறது என்று தெரியாத அளவிற்கு இன்னல்கள் ஏற்படலாம். ஆனால், அவற்றை உங்கள் சாதுர்யத்தால் முறியடிப்பீர்கள். இருப்பினும், வண்டியில் வெளியே செல்லும் போதும், பர்ஸை பாக்கெட்டில் வைக்கும் போதும் கவனம் தேவை.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
இன்று உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். கடினமான பணிகளைக் கூட எளிதாக குறித்த நேரத்திற்கு முன் முடிப்பீர்கள். இன்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யம் அளவிற்கு பணப்புழக்கம் காணப்படும். உங்கள் சேமிக்கும் திறன் அதிகரிக்கும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இது உகந்த நாள். இன்று நிதிநிலையில் நம்ப முடியாத அளவு பலன் இருக்கும். உங்கள் சொத்துக்கள் அதிகரிக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)