மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
பணியில் சில இறுக்கமான சூழ்நிலை நிலவும். திறமையுடன் , விவேகமாக செயல்பட்டால் வெற்றியை வசப்படுத்தலாம். குடும்ப விஷயங்களில் நிலவிய குழப்பம் அகலும். அமைதியான அணுகுமுறையை கையாள்வது நல்லது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
இன்றைய நாளில் பெரும்பாலான உங்களது முயற்சிகள் வெற்றியில் முடியும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அலைச்சல் குறையும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உடல் சோர்வாக காணப்படுவீர்கள். அது பணியின் நிமித்தம் உருவானது என்பதால், நிம்மதி அடையலாம். கல்வித் தரம் மேம்படும். செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிட்டு செயல்படுங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
வெற்றி உங்களைத் தேடி வரும். அதனை அனுபவிப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் உண்டாகும். சேமிப்பு கை கொடுக்கும். காதல் கைகூடும். குடும்ப உறவில் நிம்மதி நிலவும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
சவால் நிறைந்த பணிச் சூழலில் சிறப்பாக செயல்படுவீர்கள். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் விவாதத்தில் ஈடுபடுவீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள். சூழ்நிலை பார்த்து காய்களை நகர்த்துவீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பல தடைகளுக்குப் பின் சில நல்ல விஷயங்கள் உங்கள் மனதை குளிர்விக்க காத்திருக்கிறது. பணவரவுடன் செலவும் சேர்ந்து காணப்படும். சீரான நிதிநிலைமையில் தடுமாறினாலும் காப்பாற்றப்படுவீர்கள். திருமண தோஷம் விலகும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
மகிழ்ச்சியான மனநிலையுடன் காணப்படுவீர்கள். ஆதரவு அதிகரிக்கும். தீவிரமான எதிர்ப்புகளையும் சாதாரணமாக கடந்து செல்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறவில் மீண்டும் நிம்மதி உருவாகும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
கல்வியில் அதிக ஈடுபாடு உண்டாகும். மாணவர்களின் படிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சிக்கலான சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிப்பீர்கள். குடும்ப உறவில் சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
அரசு வேலை கிடைக்க அமோக வாய்ப்புள்ளது. அரசுத் துறையில் உங்கள் முயற்சியை மேலும் அதிகப்படுத்துங்கள். பெரிய சர்பிரைஸ் காத்திருக்கிறது. எது தேவை, தேவையற்றது என பகுப்பாய்வு அவசியம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
குழந்தை வளர்ப்பில் கவனம் அவசியம். நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். முடிவு எடுப்பதில் தெளிவாக இருங்கள். பணிச்சுமை அதிகரிக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
நேர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். பொறுப்புகளை திறமையாக கையாள்வதில் தடைகள் காணப்படும். உங்கள் குழந்தைகளின் மற்றும் குடும்பத்தின் வளர்ச்சி பற்றிய கவலை காணப்படும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள் அல்ல. பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. ஏற்ற இறக்கங்களை காண்பீர்கள். அதேசமயம், முடிவு திருப்தியாக இருக்கும்.