மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
மேலே எழும்பி முன்னுக்கு வர வேண்டுமே என்று நினைத்தாலும், உங்களுக்கு எதிராக சில அலைகள் இருக்கும். உங்கள் நண்பர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நிதிநிலைமை இன்று எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
கடினமாக வேலை செய்வதை விட, புத்திசாலித்தனமாக வேலை செய்வது எப்படி என்பதை இப்போது கற்று அறிந்திருப்பீர்கள். அது உங்களுக்கு பயன் தரும். எவ்வளவு உழைத்தாலும், உரிய பாராட்டு கிடைக்கவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். பாராட்டு இல்லையென்றாலும், தனிப்பட்ட உங்களின் வளர்ச்சி முன்னேற்றம் பெறும். கடவுள் வழிபாடு அவசியம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
சுமூகமாக உங்கள் பாதை செல்லும். அதில் கூர்மையான ஆயுதங்களை நிரப்புவதும், நிரப்பாமல் போவதும் உங்கள் கைகளில் தான் உள்ளது. நேர்மறையான சிந்தனைகளை வெளிப்படுத்துங்கள். தோல்வி தலைத் தெறித்து ஓடும். சுமாரான நாள் இன்று என்றாலும், நிம்மதி கிட்டும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
நிம்மதியான சூழல் நிலவும். வெளியூர் பயணம் அமையும். பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்படும். பணியிடத்தில் உங்களுக்கு ஏற்ற சூழல் உருவாகும். அதை இம்முறை முழுமையாக அனுபவிப்பீர்கள். சில தடைகள் உருவாக வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக, இன்று மகிழ்ச்சியான நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
முயற்சிகளை கையில் எடுக்க வேண்டிய நாள். நீங்கள் இவ்வளவு நாள் பொறுமையுடன் காத்திருந்த வாய்ப்புகள் எல்லாம் கைக்கூடி வருகிறது. உங்கள் திறமையால் நீங்கள் முயற்சி எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை பெற்றுத் தரும். நீண்ட நாள் கனவு நினைவாகும் நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
மற்றவர்களை நம்பாமல் உங்களை நம்ப வேண்டிய நேரமிது. உங்கள் தொழில் பார்ட்னர்கள் கூட உங்களுக்கு உதவுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. உங்கள் கைகளே உங்களுக்கு உதவி. குடும்பத்தாரிடம் எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
எதிர்காலத்திற்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உங்கள் தேவைகள் குறித்து பேசவில்லை என்றால், அது அடுத்த மாதம் வரை தள்ளிப் போக வாய்ப்புள்ளது. குறிப்பாக, தம்பதியினர் தங்களுக்குள் நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்ள உட்கார்ந்து பேச வேண்டியது அவசியம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
மறைமுகமாக உங்களை தாக்கும் எதிரிகளை விரைவில் அடையாளம் காண்பீர்கள். இதனால், உங்களை சுற்றி வந்த இன்னல்கள் அகலும். உங்களின் நேர்மையான எண்ணங்களுக்கு வெற்றி உறுதி. நீண்ட நெடுக பயண திட்டம் இருப்பின், அதை நிறைவேற்றிக் கொள்ள இது தகுந்த காலம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், உங்களின் ஆதிக்கம் தொடரும். வீடு கட்டும் எண்ணம் கைக்கூடும். அந்த அமைப்பு இப்போது ஏற்பட்டிருக்கிறது. கடிவாளம் விலகும். விரைவில் நல்ல செய்தி கிட்டும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
தன்னம்பிக்கையை இழந்தாலும் வெற்றியை நோக்கியே பயணிப்பீர்கள். சிறிது காலத்திற்கு இந்த சறுக்கல் இருக்கும். மீண்டும் புத்துயிர் பெற்று விரைந்து முன்னேறுவீர்கள். சுமாரான நாள் இது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உங்கள் மன ஓட்டத்தில் செல்வீர்கள். கடமைக்குக் கூட பொறுமை காக்க முயற்சி செய்ய மாட்டீர்கள். உங்களின் கிரகம் அப்படி!. கடவுள் வழிபாடு உங்களுக்கு அவசியம். சில சறுக்கல்களில் இருந்து அது உங்களை காப்பாற்றும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
தகுதியான இடத்திற்கு செல்ல நீங்கள் அதிக நாட்களுக்கு காத்திருக்க தேவையில்லை. உங்களுக்காக ஏற்றமிகு நாள் இது. நீங்கள் எடுக்கும் முயற்சியில் பலன் கிடைக்கும். முயற்சியும் புத்திசாலித்தனமாக இருக்கும்.