Today Rasi Palan, 16th December 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 16th December 2019: இன்றைய ராசி பலன், டிசம்பர் 16, 2019
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
Advertisment
Advertisements
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
பிரியமானவர்களுக்காக எதையும் செய்ய துணிவீர்கள். தங்களை புதிதாக மாற்றிக்கொள்ள முயல்வீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
பதறிய காரியம் சிதறும் என்ற உண்மையை உணர்வீர்கள். வார்த்தைகளில் நிதானம் அவசியம். மாற்றுக்கருத்து உடையோரால் அவமதிப்புக்குள்ளாக்கும் வாய்ப்பு உண்டு.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
நிதிவிவகாரங்களில் திருப்திகரமான நிலை நிலவும். கொண்ட கொள்கைகளில் உறுதியாக இருப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
இன்முகத்துடன் இருந்து நாளை இனிமையானதாக மாற்றிக்கொள்வீர்கள். தானும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்கவத்து மகிழ்வீர்கள். இலக்குகளை நோக்கிய உங்கள் பயணம் இனிதாக அமையும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கிரகங்களின் பார்வை சாதகமாக இல்லாததால், எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படும். கணவன் - மனைவி இடையே ரொமான்ஸ் அதிகரிக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் நபர் ஒருவரை இன்று சந்திப்பீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
நிதி விவகாரம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவகாரங்களில் நிம்மதி ஏற்படும். உங்கள் முதலீட்டு திட்டங்களை மாற்றியமைப்பீர்கள். வரவேண்டிய இடத்தில் இருந்து பணம் சுலபமாக வந்து சேரும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
மனசஞ்சலம் அதிகரிக்கும் நாள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும்வரை எவ்வித பாதிப்புமில்லை. வாகனப்போக்குவரத்தில் அதிக கவனம் வேண்டும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக உள்ளதே என்று மனம் சோர்வடைவீர்கள். புது முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் தவிர்ப்பது நல்லது. சொந்த விஷயங்களை பொதுஇடங்களில் பகிராமல் இருப்பது நலம். நண்பர்கள், உறவினர்கள் நட்பு பாராட்டுவர்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவீர்கள். மனம் அமைதியாக உணர்வீர்கள். மகிழ்ச்சியான நாள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால், மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
புது முயற்சிகள் குறித்து ஆலோசிப்பீர்கள். வழக்கமான நடைமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்வீர்கள். மற்றவர்களிடம் குறை காண்பது தவிர்த்தல் நலம். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
மனம் மகிழ்ச்சியான நாள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆன்மிக சிந்தனைகளில் நாட்டம் இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.