Today Rasi Palan, 16th January 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 16th January 2020: இன்றைய ராசி பலன், ஜனவரி 16, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
நீங்கள் கைவைக்கும் எந்த காரியமும் தோல்வி அடையாது. இன்று உங்களுக்கு முழுமையான வெற்றிகளை தரும் நாள். காவல்துறையில் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. கணினி துறையில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
பக்தியுடன் காணப்படுவீர்கள். தோல்வி உங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். பக்குவத்துடன் இனி அணுகுவீர்கள். குடும்பத்தினர் மேல் அக்கறை காட்டுவீர்கள். பணியிடத்தில் அமைதியான சூழல் நிலவும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்கள் நிதி நிலைமையை சமாளிக்க நல்ல திட்டங்களை உருவாக்குவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். கடல் கடந்து செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அம்பாளை வணங்கி இன்றைய தினத்தை தொடங்குங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
தலைவனாக இருந்து வழிநடத்துவீர்கள். மற்றவர்களுக்கு ஆணையிடும் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. நேர்மையாக செயல்படும் உங்களுக்கு நன்மதிப்பு தானாக வந்து சேரும். தேவையில்லாத கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
பணத்தை விட்டு எறிந்தால் வேலை நடந்துவிடும் என்று நினைப்பது தவறு. உறவுகளுக்கும், நட்பிற்கும் மரியாதை கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் மேன்மை ஏற்படும். நிம்மதியான நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
நீங்கள் இதற்கு முன்பு பார்த்திராத உறவினர்கள் கூட உங்கள் உதவியைத் தேடி வருவார்கள். உங்களது அன்பான அணுகுமுறை எதிரிகளையும் வசப்படுத்தும். பெண்களுக்கு இருந்து வந்த அசௌகரியங்கள் அகலும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
துணிச்சலாக அனைத்து விஷயங்களையும் எதிர்கொண்டு வரும் நீங்கள், உங்கள் சொந்த விஷயத்தில் கோட்டை விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை பணிய வைப்பார்கள். மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
கடன் தொல்லைகள் நீங்கும். உண்மையுடன், நேர்மையாக செயல்படுவீர்கள். பணியிடத்தல் செல்வாக்குடன் வலம் வருவீர்கள். அதில் சில இம்சைகளும் உங்களை வலம் வரும். வெற்றிகரமான நாள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
குடும்ப உறவில் மகிழ்ச்சி நீடிக்கும். இதனால், நீண்ட காலம் மனதில் இருந்த ரணம் குறையும். சில ஆச்சர்யமான அதிர்ச்சிகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. அதற்காக அதிகளவு கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. அது உங்களை பேராபத்தில் கொண்டு போய் நிறுத்தும். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டிய நாள் இது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
புதிய வாழ்க்கைக்கான நல்ல அடித்தளம் போடுவீர்கள். மகிழ்ச்சியான நாள். முன்பு உங்களை உதாசீனம்படுத்தியவர்கள் இப்போது உங்களை ஆராதிப்பார்கள். அதனை நம்ப வேண்டாம். உண்மை எது, பொய் எது என்பதை பிரித்து பழக முயற்சி செய்யுங்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
வேலை உடனடியாக முடிக்க வேண்டும் என்பதற்காக மாற்று வழிகளை தேர்வு செய்வீர்கள். அது நல்லதிலும் போய் முடியலாம், தோல்வியிலும் முடியலாம். பிரச்சனைகளை பேசித் தீர்க்க வேண்டிய நேரமிது.