Advertisment

Rasi Palan 16th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 16th July Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 16th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan 16th July: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 16th July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 16th July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை 16, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்கள் கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமானவற்றை எளிமைப்படுத்தி கொடுக்க தயாராக இருக்கின்றன. ஆகையால், உங்களுக்கு இன்று தோல்வி என்பது அறவே இல்லை. வெற்றிக்கான அட்வான்ஸ் வாழ்த்துகள். அதேசமயம், உங்கள் வேகத்தைக் குறைத்து, சில சாதக பாதக அம்சங்களை யோசியுங்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

இன்று மதியத்திற்கு மேல் உங்கள் யோசனை, சிந்தனை என அனைத்தும் மாறும். இதனால், உங்களுக்கு பிடித்த நபர்கள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை சரி செய்ய முயற்சி செய்தும் தோல்வியைப் பரிசாய் பெறுவீர்கள். உங்களுக்கு இப்போது தனிமை என்பதை அனைவரும் உணருவார்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

இன்று உங்களுக்கு அனைத்து விதத்திலும் சாதகமான நாள். உங்கள் பெற்றோர்களின் சொல்படி நடந்து கொள்வீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளையும் கேட்பீர்கள், மூன்றாம் நபர்களின் ஆலோசனைகளையும் கேட்பீர்கள். அதை தெளிவான விஷயங்களை ஏற்றுக் கொள்வீர்கள். அதுவே உங்களது வெற்றிக்கு அடையாளம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

அதிகப்படியான பணியில் ஈடுபட கடுமையான ஈடுபடுவீர்கள். அதனால் நன்மையும் உண்டு. சில சிக்கல்களும் உண்டு. உங்கள் வருமானத்திற்கு ஏற்று வேலையைச் செய்யுங்கள் அதுவே போதும். நீங்கள் கை வைக்கும் காரியம் துலங்கும். வெற்றி உங்களுக்கே!.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உங்களது கிரக நிலைகள் உங்களது தன்னம்பிக்கையையும், விடா முயற்சிக்கான குணாதிசயத்தையும் வலிமையாக்கும். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற உங்களது எண்ணம் விரைவில் நிறைவேறும். உங்களுக்கான நேரம் இது.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

ஓய்வு இப்போது உங்களுக்கு அவசியம் என்பது உணருங்கள். தொடர் உழைப்பு உங்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் சோதிக்கும். வாக்கு கொடுத்து எடுத்துக் கொண்ட பணியை முடிப்பதில் தான் இவ்வளவு சிக்கலே. கடவுள் வழிபாடு உங்களுக்கு அவசியம்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

ஒரு விஷயத்தை எப்படி அணுக வேண்டும் என்பதில் உங்களுக்கு உள்ள புரிதலே போதுமானது. எதற்கு எல்லாவற்றுக்கும் மற்றவர்களின் ஆலோசனை? அப்படியெனில், நமக்கு எதுக்கு சுய புத்தி? யோசியுங்கள். உங்களைச் சுற்றி உள்ள பிரச்சனைகள் உங்களை விட மற்ற எவருக்கும் தெரியாது. இன்று சுமாரான நாளாக இருந்தாலும், உங்களுக்கானதாக இருக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பது கிரக நிலைகள் உங்களுக்கு இந்நேரம் உணர்த்தியிருக்கும். சவாலான சூழ்நிலைகளை நீங்கள் கையாளும் விதமே, உங்களது திறமையை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடும். உங்களது வெற்றிக்கு நீங்களே உருவாக்குங்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே எல்லாம் இருக்கிறது. உங்கள் குடும்பத்தில் இருந்தே உங்களுக்கு எதிர்வினை இருக்குமா என்ன? பிறகு எதற்கு வீண் சந்தேகம்? மற்றவர்கள் உங்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். திறமையுடன் பணியாற்றுவீர்கள். இவையனைத்தும் உங்கள் சக பணியாளர்களின் கவனத்தை ஈர்க்கும். உங்களின் நேர்மையான செயல்திறன் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பணிகள் இறுக்கமாக காணப்படும். பணிச் சூழலைக் கையாள்வதை கடினமாகவும் சவாலாகவும் உணர்வீர்கள். பணி நிமித்தமான பயணங்கள் சாத்தியம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று சேமிக்க முடியும். அதனால் மிகுந்த திருப்தி உண்டாகும். இன்று முழு ஆரோக்கியம் காணப்படும். உங்களிடம் இன்று உறுதி காணப்படும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment