Today Rasi Palan, 16th July 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 16th July 2020: இன்றைய ராசி பலன், ஜுலை 16, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
நேர்மையான முறையில் நாட்களை அமைத்துச் செல்வீர்கள். யாருக்கும் தானாக சென்று கையெழுத்து இட வேண்டாம். நேரடியாக உங்களுக்கு பிரச்சனைகள் வராவிடிலும், மறைமுகமாக சில தாக்கங்களை சந்திக்க நேரிடலாம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
முதலில் வீட்டை கவனியுங்கள். பிறகு, நாட்டை கவனிக்கலாம். இது உங்களுக்கு தான் பொருந்தும். ஏற்கனவே மீதமிருக்கும் பல பணிகளை முடிக்க முயற்சி செய்யுங்கள். இலக்கை முதலில் தீர்மானம் செய்யுங்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்களை புறக்கணித்தவர்கள் மீண்டும் உங்களை தேடி வருவார்கள். இது உங்களுக்கான நாள். சோதனைகளை சாதனைகளாக மாற்றும் வித்தையை இப்போது கற்றிருப்பீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் அமைதியாகவும், சிறப்பாகவும் நடக்கும். மற்றவர்களின் காலணிக்குள் நுழைந்து நீங்கள் செயல்பட வேண்டாம். நீங்கள் நீங்களாக இருங்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
உங்கள் மேல் அனுதாபம் ஏற்படுத்தும்படி நடந்து கொள்வீர்கள். இதனால், யாருக்கு லாபம் என்பதை நீங்கள் உணர வேண்டும். மாணவர்களுக்கு அனுகூலமான நாள். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
சேர்க்கை சரியில்லாமல் போனால், எல்லாம் நாசம் தான். அதில் கவனம் தேவை. உங்கள் இலக்கை நோக்கி செல்ல மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். முயற்சி இல்லாமல் வெற்றி கிடைக்காது. உழைக்க வேண்டிய நாள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
முடிவு எடுத்துவிட்டீர்கள் என்றால், நிச்சயம் அதை செய்து முடித்துவிடுவீர்கள். கேட்பதை வைத்து எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். நண்பர்களை முழுவதாக நம்ப வேண்டாம். அது உங்களை சங்கடத்தில் கொண்டு வந்து நிறுத்தும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நேரமிது. மற்ற வேலைகளை விட்டுவிட்டு கூட, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். யாருக்காகவும் உங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்க வேண்டாம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
உங்கள் குடும்ப நலனுக்காக செலவு செய்கிறீர்கள் என்றால், செலவு குறித்து ஏன் நீங்கள் வருத்தப்பட வேண்டும்? அது முற்றிலும் முட்டாள்த்தனமானது.உங்கள் நலனுக்காக நீங்கள் செலவு செய்து தான் ஆக வேண்டும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உங்களுக்கு கற்பனை வளம் நிரம்ப இருக்கிறது என்பதற்காக, தேவையில்லாத சிந்தனைகள் மூலம், உங்களுக்கே நீங்களே தலைவலியை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். குழப்பமான மனநிலையை தவிர்க்க, கடவுள் வழிபாட்டில் ஈடுபடுங்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
கல்யாணம் கைக்கூடும். கவலைகள் நீங்கும். அரசிடம் இருந்து நிவாரண உதவிகள் வந்து சேரும். ஆனால், நீங்களே கவலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். ஒரு காபி போதும் உங்கள் கவலைகளை போக்க.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
மேம்போக்கான சிந்தனைகளை கைவிடுங்கள். தவிர்க்க முடியாத சில சங்கடங்களை நீங்கள் அனுபவித்தே தீர வேண்டியிருக்கும். நட்புக்காக குடும்பத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil