மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
உங்களது நேர்மையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். ஆனால், சில தோல்விகள் உங்கள் மனநிலையை அசைத்துப் பார்க்கும். ஏமாறாதீர்கள். மற்றவர்கள் பல ஐடியாக்களை கொடுத்து உங்களை குழப்ப நேரிடும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
சரியான விஷயத்தை நோக்கி முடிவெடுக்க சில சமயம் நீங்கள் கடினமான தருணங்களை சந்திக்க நேரிடும். இன்று சில சவால்களை நீங்கள் எதிர்கொள்வீர்கள். ஆனால், முடிவில் அது உங்களுக்கு சாதகமாக அமையும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
நிதிநிலைமை சறுக்கலாக இருக்கும். கவனத்துடன் சிந்தித்து செயல்பட வேண்டும். உடல்நிலையில் அக்கறை வேண்டும். அமைதியுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
சில எதிர்பாராத திருப்பங்கள் உங்கள் வாழ்வை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் சொல்லும். அது உங்கள் தினத்தை மேலும் ஒளிமயமாக்கும். தேவையில்லாத சில விஷயங்கள் உங்களை விட்டு அதுவாகவே அகலும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
இன்று கடினமான நாள். அதை விளக்குவது சற்று கடினம். இதனை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏன்? ஏதற்கு என்ற உங்கள் கேள்விக்கான பதில், இப்போது கிடைக்காவிட்டாலும், பின் நாளில் கிடைக்கும். அதுவரை பொறுமை தேவை.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
நீங்கள் மீண்டும் ஃபார்முக்கு திரும்பும் நாள் இது. பேக் டூ ஃபார்ம். சில அழுத்தங்கள் உங்களுக்கு இருக்கும். ஆனால், அது நல்லது தான். உங்களது முந்தைய சாதனையை நீங்களே தகர்க்க அது காரணமாக அமையும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
நிகழ் காலம் மிகவும் சவாலானதாக இருக்கும். அதுவே, சில வாய்ப்புகளை உங்களுக்கு அளிக்கும். மற்றவர்களின் கையில் உங்கள் வாழ்க்கையை ஒப்படைக்க வேண்டும். அதாவது, சிறு சிறு விஷயங்களில் கூட, மற்றவர்களின் முடிவுகளை நீங்கள் ஆதரிக்க வேண்டாம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
ரொமாண்டிக்கான நாள் இது. உண்மையில் ரொமாண்டிக்கானது. உங்கள் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவீர்கள். பணியிடங்களில் நல்ல பெயர் கிடைக்கும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
காத்திருக்கும் பணிகளை தள்ளிப்போடாமல் உடனே செய்ய முயற்சி செய்யுங்கள். இது உங்களது நிதிநிலைமையை சரி செய்ய உதவும். இல்லையெனில், வீண் சங்கடங்கள் வந்து சேரும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
வெற்றிகரமான நாள். வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். பணவரவு இருக்கும். உங்களின் திடமான மனநிலை சூழ்நிலைகளை உங்களுக்கு சாதகமாக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
நீங்கள் பணி செய்யும் இடங்களில், உங்களை தொந்தரவு செய்யும், உங்களை எரிச்சல் அடையச் செய்யும் நபர்களை சந்திக்க நேரிடும். அதனை தவிர்க்க முயலுங்கள். வெற்றி இனி உங்கள் பக்கம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
பல காலமாக விற்கப்படாமல் இருக்கும் நிலங்கள் விற்பனையாகும். அசையா சொத்துகள் மூலம் வரவு வந்து சேரும். பிள்ளைகளின் வெளிநாடு கனவு நிறைவேற வாய்ப்புள்ளது. திருமண வைபோகத்திற்கான நேரம் கைக்கூடும். நிம்மதியான நாள்.