Rasi Palan 16th September 2020: இன்றைய ராசிபலன்

rasi palan 16th september 2020 rasi palan today – இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan september 16, இன்றைய ராசிபலன்

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 16th September 2020: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 16, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

சமீபத்திய புதன் குரு கிரகங்களின் நிலை பற்றி ஒரு பழைய ஜோதிட நூல், ‘உரையாடலின் மத்தியில் சில நேரங்களில் பெயர்களையும் சொற்களையும் மறந்துவிடலாம். இந்த மனப்பான்மை அடிக்கடி ஏற்படுகிறது. எனவே, நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் என்று திடீரென்று மறந்துவிட்டால், பரவாயில்லை!’ என்று கூறுகிறது.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ சமீபத்திய மோதல்களால் நீங்கள் இன்னும் சற்று கலக்கமடைவீர்கள் என்றாலும், நல்ல உணர்வு விரைவில் மீட்கப்படுவதை உறுதிசெய்ய நீங்கள் செய்யக்கூடியது அதிகம் உள்ளது. உங்களுடைய பொறுமையான குணத்துக்காக நண்பர்கள் நன்றி கூறுவார்கள். அடுத்த ஆண்டு உங்களுக்கான பரிசுகளைப் பெறுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்கள் ராசியின் ஆட்சியாளரான சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையிலான உறவில் இன்னும் உறுதியான ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது. இப்போது, வெளிப்படையாக விரும்பத்தகாத நிகழ்வுகள் உட்பட எல்லாவற்றிற்கும் ஒரு நோக்கம் உள்ளது என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் தவறாக வழிநடத்தப்படலாம் அல்லது உங்களிடம் இருந்து அதிக பணம் வசூலிக்கப்படலாம் என்பதால், உங்கள் பணத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சக ஊழியர்களும் நண்பர்களும், உங்களை வீழ்த்திவிடச் செய்யும் அல்லது கவர்ச்சியான சலுகையை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் இருந்து உங்களை சோர்வடையச் செய்ய முயற்சிக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் உங்களை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்பது அல்ல. உங்கள் ராசியில் சந்திரனின் ஆக்கிரமிப்பு உங்களை சிறந்த வேலைக்கு அமைக்கிறது. அதனால், உங்களை வீழ்த்த முடியாது.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் நண்பர்களிடமும் நடைபெற்று வரும் ஆழமான, வண்ணமயமான அனுபவங்கள் அனைத்தையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்துங்கள். இருப்பினும், உங்களில் சிலர் தற்போது ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் மற்றவர்களின் நோக்கங்களை சந்தேகிப்பதாகவும் உணரலாம். வேறு யாராவது உங்களை குறைத்து மதிப்பிட்டிருந்தால், அவர்கள் தற்செயலாக அவ்வாறு செய்திருக்கலாம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆக. 23)

தற்போது கிரகங்களின் போக்குகளைப் பார்க்கும்போது, அதிர்ஷ்டம் உங்களைப் பார்த்து புன்னகைக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. நீங்கள், உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது உங்களுடைய தீவிரமான உணர்ச்சிகளுக்குப் பொறுப்பேற்கவோ தவறியதால் மட்டுமே உங்களுக்கு பிரச்சினைகள் எழும். உங்களுடைய ஒரு நெருங்கிய நண்பர் உங்களுக்குத் தெரியாமல், அவர் உங்களுக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறார் என்பதை நீங்கள் விரைவில் கண்டுபிடிப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

நீங்கள் ஒரு லட்சிய மனநிலையில் இருக்கிறீர்கள். முதல் இடத்தை பிடிக்க வேண்டும் ஆசையில், சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற கவலையில் இருப்பீர்கள். அது பொதுவாக உங்களுடைய நண்பர்களைப் பொறுத்து அமைந்திருக்கும். உங்கள் விவகாரங்களில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் ஆற்ற வேண்டிய சக்திவாய்ந்த பங்கை இப்போது திறந்த மனதுடன் ஒப்புக் கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்கள் ராசியில் சில நேரங்களில் குரு நன்மை செய்யும். குருவின் இருப்பு வெள்ளியால் வலுப்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது, ஒரு விடுமுறைக்கோ அல்லது நீண்ட தூர சாகச பயணத்துக்கோ வாய்ப்புகள் ஒருபோதும் பிரகாசமாக இல்லை என்பது தெளிவாகிறது. அதனால், இப்போதே திட்டங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

சிலர் சந்தேகத்திற்கு இடமின்றி உங்களிடம் நன்கு பழகுகிறார்கள். மற்றவர்கள் அப்படி இல்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களுடைய முக்கிய வேலை தந்திரோபாயத்தோடும் அறிவோடும் தனிப்பட்ட உறவுகளை நிர்வகிப்பது ஆகும். உங்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் விருப்பங்களையும் ஒரே நேரத்தில் ஏற்கலாம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்கள் ராசியில் கல்யான வீட்டிற்கு சந்திரன் வருவகிறது என்பதற்கான அறிகுறி உள்ளது. பல சிக்கல்களை நீங்கள் எச்சரிக்கையாக கையாள வேண்டும். அனைவரின் உணர்வுகளையும் மதித்து கவனமாக நடந்துகொள்ளுங்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பரபரப்பான கிரக அம்சங்கள் உங்கள் கற்பனையைத் தூண்டும். மகத்தான முன்னேற்றங்களை அடைய உங்களுக்கு ஒரு வாய்ப்பு இன்னும் இருக்கிறது. நீங்கள் இழந்த இடத்தை பிடிக்க இன்னும் சில வழிகள் உள்ளன. நண்பர்கள் வலியுறுத்தினால் அதிகம் கவலைப்பட வேண்டாம். விரைவில் உங்களுடைய வாழ்க்கை மிகவும் நிதானமாக இருக்கும்.

கும்பம் (ஜனவரி 31 – பிப்ரவரி 19)

செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்கள் உங்கள் ராசிக்கு சவாலான மற்றும் பயனுள்ள அம்சங்களின் கலவையான விஷயங்களை அனுப்பும். நண்பர்கள் உங்களை தன்னம்பிக்கையுடன் வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்ப்பீர்கள். மகிழ்ச்சியான அனுபவங்களைத் தேடும் உங்களுக்கு எல்லைகள் இல்லை. மேலும், நீங்கள் காதலிக்க விரும்பினால் காதலியுங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்களுடைய ராசியில் அனைத்து அறிகுறிகளும் தொழில்முறை நோக்கங்கள் பண நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்களை மையமாகக் கொண்டவை. நீங்கள் சமாளிக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டால் இது ஒன்றும் ஆச்சரியமில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasi palan 16th september 2020

Next Story
Rasi Palan 14th September 2020: இன்றைய ராசிபலன்Today rasi palan, rasi palan september 14, இன்றைய ராசிபலன், செப்டம்பர் 14 ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com