Rasi Palan 17th August: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 17th August Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 17th August Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 17th August: இன்றைய ராசிபலன்

Rasi Palan 17th August: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 17th August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 17th August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 17, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

Advertisment
Advertisements

புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தகுந்த நேரம் பார்த்து செய்தால் எந்த செயலிலும் வெற்றியடையலாம் என்பதில் உறுதியாக இருப்பீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கிரகங்கள் சாதகமாக இருப்பதால், பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடந்த காலத்தை குறித்து சிந்தனை செய்வீர்கள். ஆச்சர்யம் காத்திருக்கிறது. நிதானம் காக்கவும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

பயணத்தை ஒத்திபோடுவீர்கள். மற்றவர்களுடனான கருத்துவேறுபாட்டால், செயல்களில் தடை, தாமதம் ஏற்படும். பிரச்னைகளின் அடிநாதம் அறிந்து அதை களைய முற்படுவீர்கள். ஒன்றுக்கு பலமுறை யோசித்து செயல்களை செய்தல் நலம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும். நிதிநிலைமையை வளப்படுத்தி பாதுகாப்பு செய்துகொள்வீர்கள். கணவன் - மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மற்றவர்களின் கருத்துகளை உதாசீனப்படுத்துவீர்கள். மனம்போன போக்கில் செயல்படுவதால், பிரச்னைகளுக்கு உள்ளாவீர்கள். கடந்தகால அனுபவங்களை கொண்டு செயல்களை செய்தால் இழப்புகளை தவிர்க்கலாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மகிழ்ச்சியான நாள். சந்திரன் சாதகமாக இருப்பதால், வரவேண்டிய பணம் குறித்த நேரத்தில் கைக்கு வரும். பாராட்டுகள் குவியும். கடந்தகால செயல்பாடுகளுக்கு மற்றவர்களின் மூலம் வாழ்த்துகளை பெறுவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். மனசஞ்சலத்தால் அதிகம் பாதிக்கப்படுவீர்கள். நிதானம் அவசியம். குழந்தைகளிடம் அதிகம் கோபப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

தொழில்சார்ந்த முடிவுகள் எடுப்பதை ஒத்திப்போடுவது நல்லது. பணியிடங்களில் தாமரை இலை நீர் போல இருப்பீர்கள். ஒய்வை அதிகம் மனம் விரும்புவதால், வழக்கமான பணிகளிலிருந்து விடுபட நினைப்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

திட்டமிட்ட செயல்களில் மாற்றம் செய்வீர்கள். செயல்களில் ஏற்படும் தவறுக்கு மற்றவர்களை குற்றம்சாட்டுவீர்கள். கருத்து வேறுபாடுகள் தோன்றும். நிதானம் காப்பது நல்லது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

தொழில் சார்ந்த விசயங்களில் தெளிவான முடிவுகளை எடுக்க தயங்குவீர்கள். எதிர்காலத்திற்காக திட்டம் தீட்டுவீர்கள்.இளைய சகோதரருடன் ஆலோசனை செய்வீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

முக்கியமான விசயங்களில் மனக்குழப்பங்கள் நீடிக்கும். பயணங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை தள்ளிப்போட திட்டமிடுவீர்கள். இருக்கும் இடமே தற்போதைக்கு சிறந்தது என்ற நிலைக்கு வருவீர்கள். புதிய முயற்சிகளை தவிர்ப்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

திட்டமிடாத செயல்கள் வெற்றியை தராது என்பதை உணர்வீர்கள். சந்திரன் சாதகமான இடத்திற்கு வருவதால், செயல்களில் இருந்துவந்த சுணக்கம் மறையும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்கால வளமான வாழ்க்கைக்கு முக்கிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

Rishabam Rasi Palan Meenam Rasi Palan Kanni Rasi Palan Midhunam Rasi Palan Simmam Rasi Palan Kumbam Rasi Palan Magaram Rasi Palan Dhanusu Rasi Palan Viruchigam Rasi Palan Thulam Rasi Palan Kadagam Rasi Palan Mesham Rasi Palan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: